• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தாலிபான்கள் ஆப்கான் சுதந்திரப் போராட்ட வீரர்கள்: சமாஜ்வாதி எம்.பி. கருத்து

தாலிபான்கள் ஆப்கான் சுதந்திரப் போராட்ட வீரர்கள்: சமாஜ்வாதி எம்.பி. கருத்து

சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஷபிக்குர் ரஹ்மான் பராக்

சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஷபிக்குர் ரஹ்மான் பராக்

அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள்தான் தலிபான்கள், இதில் தவறென்ன என்று சமாஜ்வாதி எம்.பி. ஷபிக்குர் ரஹ்மான் பராக் கருத்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
    அமெரிக்கா போன்ற வல்லரசுகளின் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள்தான் தாலிபான்கள், இதில் தவறென்ன என்று சமாஜ்வாதி எம்.பி. ஷபிக்குர் ரஹ்மான் பராக் கருத்து தெரிவித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர். அதிபர் அஷ்ரப் கனி தப்பியோடி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார்.

    ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர். பல நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளும் சிக்கி்க் கொண்டனர். அவர்களை மீட்டு வர ஒவ்வொரு நாடும் விமானத்தை அனுப்பி வருகிறது.

    காபூலில் சிக்கியிருந்த இந்திய அதிகாரிகள், தூதரக ஊழியர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்ட 140-க்கும் மேற்பட்டோரை இந்திய விமானப்படை விமானம் பத்திரமாக மீட்டது. இந்தநிலையில் சமாஜ்வாதி கட்சி எம்.பி.ஷபிக்குர் ரஹ்மான் பராக் தாலிபான்களை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார்.

    அவர் கூறியிருப்பதாவது:

    ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்தியா போராடி சுதந்திரம் பெற்றது. தாலிபான்கள் தங்கள் நாடு சுதந்திரமடையவும், அந்நியர்களின் பிடியில் இருந்து விடுபடவும் போராடி வருகின்றனர். இப்போது வென்றுள்ளனர். தங்கள் நாட்டை தாங்களே வழி நடத்த விரும்புகின்றனர். இதில் என்ன தவறு இருக்க முடியும். தலிபான்கள் ரஷ்யா, அமெரிக்கா போன்ற வலுவான நாடுகளைக் கூட தங்கள் நாட்டை கைபற்ற அனுமதிக்காத வலிமையான சக்தியாகும்.

    என்று கூறுகிறார் சமாஜ்வாதி எம்.பி. ஷபிக்குர் ரஹ்மான்.

    ஆஃப்கானிஸ்தான் 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தாலிபான்கள் கையில் சிக்கியுள்ளது. தாலிபான்கள் பெண்கள் முன்னேற்றத்துக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். பெண் கல்வி மறுக்கப்படும், பெண்கள் புர்கா அணிய வேண்டும், ஆண்கள் துணையில்லாமல் பெண்கள் பொது இடத்திற்கு செல்ல அனுமதியில்லை என கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

    90-களில் தாலிபான்கள் ஆட்சியில் ஷரியத் சட்டம் இயற்றப்பட்டு பெண்கள் முன்னேற்றம் தடைப்பட்டது. இந்நிலையில்தான் ஆப்கான் முதல்பெண் மேயரான சரிஃபா கஃபாரி (Zarifa Ghafari) தாலிபான்களால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தான் மிகுந்த அச்சத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    ஆனால் சமாஜ்வாதி எம்.பி.யோ தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை அன்னிய சக்திகளிடமிருந்து விடுவிக்கும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் என்று கூறுகிரார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: