• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மலையாள தாலிபான்கள் - சந்தேகத்தை கிளப்பும் கேரள காங்கிரஸ் எம்.பி சசிதரூர்!

மலையாள தாலிபான்கள் - சந்தேகத்தை கிளப்பும் கேரள காங்கிரஸ் எம்.பி சசிதரூர்!

சசி தரூர், காங்கிரிஸ் எம்.பி,

சசி தரூர், காங்கிரிஸ் எம்.பி,

சமூக வலைத்தளமான ட்விட்டரில் ரமீஸ் என்பவர், தாலிபான்கள் பற்றிய வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

  • Share this:
தாலிபான் அமைப்பில் மலையாளிகள் இருக்கின்றனரா என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி சசிதரூர்.

போராளிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் அடையாளப்படுத்தப்படும் தாலிபான்கள், பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளுடன் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வந்தனர். ஆப்கன் படைகளுக்கு பக்கபலமாக இருந்த அமெரிக்க படைகள் ஆப்கானிலிருந்து வெளியேறிய நிலையில் யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வேகத்தில் ஒரு சில நாட்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று தாலிபான்கள் காபுல் நகருக்கு நுழைந்து அதிபர் மாளிகையை கைப்பற்றி உலகையே மிரளச் செய்திருக்கின்றனர்.

உலகமே உற்றுநோக்கி வரும் தாலிபான் அமைப்பில் மலையாளிகள் இருக்கின்றனரா என்ற சந்தேகத்தை கேரள காங்கிரஸ் எம்.பியான சசிதரூரே எழுப்பியிருப்பது சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.



சமூக வலைத்தளமான ட்விட்டரில் ரமீஸ் என்பவர், தாலிபான்கள் பற்றிய வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் காபுல் நகரை கைப்பற்றிய பின்னர் தாலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் மண்ணில் படுத்து முத்தமிடுகிறார். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட அந்த நபரை அருகில் இருந்த மற்ற தாலிபான்கள் ஆறுதல் படுத்தி பேசச் சொல்லுகின்றனர்.



இந்த வீடியோவுக்கு பதில் அளித்திருக்கும் கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்.பியான சசிதரூர், “அந்த வீடியோவில் ஒருவர் 8வது நொடியில் ‘சம்சாரிக்கட்டே’ (மலையாள வார்த்தை) என சொல்லுகிறார், மற்றொருவர் அதை புரிந்து கொள்கிறார். இதை பார்க்கும்போது அங்கு இரண்டு மலையாளி தாலிபான்கள் இருப்பதை போலத் தெரிகிறது.” என்ற பரபரப்பு கருத்தை முன்வைத்தார்.

இதனிடையே சசிதரூரில் இந்த கருத்துக்கு பதில் தெரிவித்திருக்கும் ரமீஸ், “தாலிபான் அமைப்பில் கேரளாவைச் சேர்ந்த யாரும் கிடையாது. இவர்கள் ஸாபுல் மாகாணத்தை சேர்ந்த பலூச்கள், இவர்கள் பிராஹ்வி (bragvi) எனும் மொழியில் பேசிக்கொள்கின்றனர். இந்த மொழி ஒரு திராவிட மொழி தான். தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்றது” என ரமீஸ் விளக்கம் அளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதே நேரத்தில் ரமீஸின் இந்த விளக்கத்துக்கு மீண்டும் பதில் தந்துள்ள சசி தரூர், இது மிகவும் சுவாரஸ்யமான விளக்கம் தான். இதை கண்டுபிடிக்க மொழியியலாளர்களிடம் விட்டுவிடுகிறேன். ஆனால் தலிபான்களுடன் தவறாக வழிநடத்தப்பட்ட மலையாளிகள் இருந்திருக்கிறார்கள், அதனால் அந்த சாத்தியத்தை முழுமையாக நிராகரிக்க முடியாது. எனவும் சசிதரூர் தெரிவித்துள்ளார்.

சசி தரூரின் இந்த கருத்து மலையாளிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: