• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தாலிபான்களால் இஸ்லாமுக்கு களங்கம் - அஜ்மீர் தர்காவின் தலைவர் வருத்தம்

தாலிபான்களால் இஸ்லாமுக்கு களங்கம் - அஜ்மீர் தர்காவின் தலைவர் வருத்தம்

Syed Jainul Abedin,

Syed Jainul Abedin,

ஷரியத் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கொலைகளையும் ஆதரிக்க முடியாது, இஸ்லாமை பொறுத்தவரையில் இதெல்லாம் குற்றம்.

  • Share this:
தலிபான்கள் "ஷரியத்" என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் இஸ்லாத்தின் நற்பெயரை கெடுத்து வருகின்றனர் என்று இந்தியாவின் புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவின் தலைவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அரசுப் படைகளை வீழ்த்திவிட்டு கடந்த ஞாயிறன்று (ஆகஸ்ட் 15) ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருக்கின்றனர் தாலிபான் போராளிகள். ஆப்கனில் ஷரியத் எனும் இஸ்லாமிய சட்டத்தை அமல்படுத்துவதே தங்கள் லட்சியமாக கொண்டு கடந்த 30 ஆண்டுகளாக அவர்கள் போராடி வந்தனர். தற்போது அவர்களின் கையில் அதிகாரம் கிடைத்த பின்னர் பெண்களுக்கான உரிமைகள் கேள்விக்குறியாகி இருக்கிறது.

இந்நிலையில் தாலிபான்களை கண்டிக்கும் விதமாக இந்தியாவின் புகழ்பெற்ற ஜெய்ப்பூரில் உள்ள அஜ்மீர் தர்காவின் தலைவரான சையது ஜெய்னுல் அபெதின் பேசியுள்ளார். தலிபான்களின் பயங்கரவாதம் மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகள் உலகில் இஸ்லாத்தின் மீதான வெறுப்பை ஊக்குவிப்பதாக அஜ்மீர் தர்காவின் தலைவரான அவர் வலியுறுத்தினார்.

Also Read: தாலிபான்களின் நண்பர்களான ஹக்கானி தீவிரவாதிகள் – இந்த கொலைகார அமைப்பின் பின்னணி என்ன?

அவர் கூறுகையில், “தலிபான்கள் ஷரியத் என்ற பெயரில் பயங்கரவாத நடவடிக்கைகளால் இஸ்லாத்தை அவமதிக்கின்றனர். பெண்கள் மீதான பாகுபாட்டினையும், ஷரியத் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கொலைகளையும் ஆதரிக்க முடியாது, இஸ்லாமை பொறுத்தவரையில் இதெல்லாம் குற்றம். தலிபான்களின் பயங்கரவாதம் மற்றும் சர்வாதிகார நடவடிக்கைகள் உலகில் இஸ்லாத்தின் மீதான வெறுப்பை ஊக்குவிக்கின்றன.

talibans


ஆப்கானிஸ்தான் மிருகத்தனமான தலிபான்களின் கைகளில் சிக்கியிருக்கிறது மற்றும் அவர்களின் அழிவு ஆட்சி தொடங்கியிருப்பதன் மூலம், பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் மற்றும் கொலைகள் அந்த நாட்டில் தொடங்கியிருக்கிறது.

முதல் கடமை என்பது நம் நாட்டை காப்பாற்றுவதும், ஒற்றுமையையும் அமைதியையும் நிலைநிறுத்துவதும் பின்னர் நம்மைப் பற்றி சிந்திப்பதும் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சட்டவிரோதமாக அதிகாரத்தை கைப்பற்றியிருக்கும் தலிபான்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் பயங்கரவாத சித்தாந்தத்தையும் ஆதரித்து வரவேற்பவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: