உறுதி ஏற்போம்! தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை

நம்முடைய ஒரு ஓட்டு மட்டும் மாற்றம் ஏற்படுத்திவிடுமா என நினைக்காதீர்கள்.

Web Desk | news18
Updated: April 20, 2019, 6:29 PM IST
உறுதி ஏற்போம்! தேர்தலில் வாக்களிப்பது நமது கடமை
வாக்களிப்போம்
Web Desk | news18
Updated: April 20, 2019, 6:29 PM IST
இது தேர்தல் காலம்! தேர்தல் கால உற்சாகங்கள், விவாதங்கள் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், நம்மில் பலர் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்லாமல் காரணம் சொல்லிக் கொண்டிருப்போம். கடந்த 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தலிலும் இதுபோல சிலர் செய்திருப்போம்.

843 மில்லியன் வாக்காளர்களில் வெறும் 66% மட்டுமே வாக்களித்துள்ளனர். மீதமுள்ள 34% பேர் தங்களது எதிர்காலத்தையும் நாட்டின் எதிர்காலத்தையும் மற்றவர்களிடம் தீர்மானிக்க விட்டுள்ளனர்.

2019 பொதுத்தேர்தல் என்பது 900 மில்லியன் வாக்காளர்களுடன் நாட்டின் மிகப்பெரும் தேர்தலாக அமையும். இதுவரையில் இல்லாத அளவில் வாக்குப்பதிவு எதிர்பார்க்கப்படுகிறது. வெறும் 66% என்றில்லாமல் இம்முறை அதிகப்படியான வாக்காளர்கள் குறிப்பாக முதல் முறை வாக்காளர்கள் அதிகளவில் வந்து வாக்களிக்க வேண்டும். நமது கடமையை 100% சரியாக நாம் செய்யாமல் அரசு மட்டும் 100% சரியாக செயல்பட வேண்டும் என எதிர்பார்ப்பது ஏன்?

நம்முடைய ஒரு ஓட்டு மட்டும் மாற்றம் ஏற்படுத்திவிடுமா என நினைக்காதீர்கள். நமது ஒற்றுமையே நமது பன்முகத்தன்மை, மற்றும் நமது எதிர்காலத்துக்காக வாக்களிப்பது அவசியம். நமது நாட்டின் எதிர்காலத்தை செதுக்க நீங்கள் மேற்கொள்ளவேண்டிய முதல் பணி குறித்து இந்த வீடியோ மூலம் அறிந்துகொள்ளலாம்.

நமக்கும் நமது நாட்டின் எதிர்காலத்துக்குமாக அனைவரும் ஒன்றிணைந்து வாக்களிக்க வேண்டும் என நெட்வொர்க் 18 மற்றும் ஹெச்டிஎஃப்சி இணைந்து இம்முயற்சியை எடுத்துள்ளது.

இத்தேர்தலில் அனைவரும் வாக்களிப்போம் என உறுதிமொழி எடுப்போம்
Loading...
https://tamil.news18.com/
First published: April 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...