Home /News /national /

World Chess Olympiad 2022 | தெற்கில் அதிகம்… வடக்கில் கம்மி… இந்தியாவில் ‘கிராண்ட்மாஸ்டர்’கள் எண்ணிக்கை எத்தனை? விவரம்!

World Chess Olympiad 2022 | தெற்கில் அதிகம்… வடக்கில் கம்மி… இந்தியாவில் ‘கிராண்ட்மாஸ்டர்’கள் எண்ணிக்கை எத்தனை? விவரம்!

 செஸ் ஒலிம்பியாட்

செஸ் ஒலிம்பியாட்

World Chess Olympiad 2022 | 1988-ம் ஆண்டு ஒரு கிராண்ட்மாஸ்டர் என இருந்த நிலை, சமீப ஆண்டுகளில், குறிப்பாக தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் சதுரங்க கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அதிகளவில் அடைவதைக் காண முடிகிறது.

இந்திய சதுரங்க வரலாற்றில் இன்று (ஜூலை 28, 2022) ஒரு முக்கியமான நாளாகும். முதன்முறையாக, செஸ் ஒலிம்பியாட் எனும் இந்த மெகா போட்டியை நடத்தும் பெருமை தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.

தமிழ்நாடு, இந்தியாவின் சதுரங்க ஆற்றலை மையமாக கொண்டுள்ள ஒரு மாநிலமாகும். மேலும், சென்னை நகரம் ‘மெக்கா ஆஃப் செஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது. இதுவரை, இந்தியா 74 கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்கியுள்ளது. அவர்களில் 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இது நாட்டின் கிராண்ட்மாஸ்டர்கள் பட்டியலில் 35 சதவீத பங்களிப்பாகும். அதுமட்டுமின்றி, இந்தியாவின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் சுப்பராமன் விஜயலட்சுமி உட்பட இதுவரை ஏழு பெண் கிராண்ட்மாஸ்டர்களை இந்தியா கண்டுள்ளது. ஜூலை 17, 2022 நிலவரப்படி, FIDE தரவரிசைப் பட்டியலில் இந்தியா ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 477 வீரர்களைக் கொண்டுள்ளது; இது ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 209 என்ற எண்ணிக்கையை கொண்ட ரஷ்யாவை விட அதிகமாகும்.

ஆகவே, தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே அதிகமாக 26 கிராண்ட்மாஸ்டர்கள் உள்ளனர், ஹரியானாவில் 1, டெல்லியில் 6, ராஜஸ்தானில் 1, குஜராத்தில் 2, மகாராஷ்டிராவில் 10, கோவாவில் 2, கர்நாடகாவில் 3, கேரளாவில் 4, மேற்கு வங்கத்தில் 8, ஒடிசாவில் 2, தெலங்கானாவில் 5 மற்றும் ஆந்திர பிரதேசத்தில் 4 கிராண்ட்மாஸ்டர்கள் உள்ளனர்.



கடந்த பத்தாண்டுகளில் இந்தியா அதன் கிராண்ட்மாஸ்டர் எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளதாக புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வருகிறது. முன்னதாக, உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இந்தியாவைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோர் தோற்கடித்தனர். 1988-ம் ஆண்டு ஒரு கிராண்ட்மாஸ்டர் என இருந்த நிலை, சமீப ஆண்டுகளில், குறிப்பாக தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த இளைஞர்கள் சதுரங்க கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை அதிகளவில் அடைவதைக் காண முடிகிறது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியா அதன் கிராண்ட்மாஸ்டர் எண்ணிக்கையை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மானுவேல் ஆரோன்


தமிழ்நாட்டின் செஸ் வரலாற்றைப் பற்றிப் பேசும்போது, மானுவல் ஆரோனின் பங்களிப்பைப் பற்றி பேச தவற முடியாது. 1935-ல் இப்போது மியான்மராக இருக்கக்கூடிய பர்மாவில் பிறந்தார். இவரது குடும்பம் இரண்டாம் உலகப் போரின் போது இந்தியாவிற்கு குடிபெயர்ந்தது. 1961-ம் ஆண்டு ஆரோன் இந்தியாவின் முதல் சர்வதேச மாஸ்டர் ஆனார். அங்கிருந்து ஆரோன் சதுரங்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு தமிழகத்தின் காட்சியையே மாற்றினார் என்று கூறினால் அது மிகையாகாது. ஆரோன் 9 முறை தேசிய சாம்பியன் வென்றவர், அதுமட்டுமின்றி, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு (AICF) மற்றும் தமிழ்நாடு மாநில செஸ் சங்கத்தின் (TNSCA) செயலாளராகவும் பணியாற்றியவர்.
Published by:Archana R
First published:

Tags: Chess, Chess Olympiad 2022, Tamil Nadu

அடுத்த செய்தி