முகப்பு /செய்தி /இந்தியா / சிவன் கோயிலை இடித்துதான் தாஜ்மஹால் கட்டப்பட்டது: பெயரை மாற்றவேண்டும் - பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

சிவன் கோயிலை இடித்துதான் தாஜ்மஹால் கட்டப்பட்டது: பெயரை மாற்றவேண்டும் - பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

தாஜ்மஹால்

தாஜ்மஹால்

சிவன் கோயில் இடிக்கப்பட்டுதான் தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது என்று பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

16-ம் நூற்றாண்டில் முகலாய அரசர் ஷாஜகான், மறைந்த அவருடைய மனைவி மும்தாஜின் நினைவாக இந்த தாஜ்மஹாலைக் கட்டினார். தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது. உலகின் காதல் சின்னமாகவும் தாஜ்மஹால் கருதப்படுகிறது. இந்தநிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்து மகா சபையைச் சேர்ந்த மூன்று பேர் தாஜ்மஹால் வளாகத்துக்குள், சிவனுக்கு பூஜை செய்ய முற்பட்டனர். அதில், ஒருவர் பெண். அவர்களை மத்திய பாதுகாப்பு படையினர் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தநிலையில் தாஜ்மஹால் குறித்த பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேந்திர சிங்கின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுளது. கடந்த சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சுரேந்திர சிங், ‘தாஜ்மஹால் கட்டப்படுவதற்கு முன் அந்த இடத்தில் சிவன் கோயில் இருந்துள்ளது. அதனை இடித்துவிட்டுதான் தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது. யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியில் தாஜ்மஹாலின் பெயர் விரைவில் ராம்மஹால் என்று பெயர் மாற்றப்படும்.

யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி, சத்ரபதி சிவாஜியின் வம்சாவளி ஆட்சி போல உள்ளது. சிவாஜியின் வம்சாவளியினர் உத்தரப் பிரதேசத்துக்கு வந்துள்ளனர். சாமர்த் குரு ராம்தாஸ், இந்தியாவுக்கு சிவாஜியைக் கொடுத்தது போல, கோரக்நாத் யோகி ஆதித்யநாத்தை உத்தரப் பிரதேசத்துக்கு கொடுத்துள்ளார். முன்னதாக, 2018-ம் ஆண்டு பேசிய சுரேந்தர் சிங், ‘முகலாய அரசர்கள் கட்டிய அத்தனை கட்டிடங்களின் பெயர்களையும் மாற்றவேண்டும்’ என்று பேசியிருந்தார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: BJP, Tajmahal, Uttar pradesh