ஹோம் /நியூஸ் /இந்தியா /

உலக நாட்டுத் தலைவர்களுக்கு தாஜ்மகாலைச் சுற்றிக்காட்டும் நிதின்குமார் சிங்!

உலக நாட்டுத் தலைவர்களுக்கு தாஜ்மகாலைச் சுற்றிக்காட்டும் நிதின்குமார் சிங்!

நிதின்குமார்

நிதின்குமார்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு தாஜ்மகாலைச் சுற்றிக்காட்டிய நிதின்குமார் சிங்தான் தொடர்ச்சியாக ஆக்ரா வரும் உலக நாட்டுத் தலைவர்களுக்கு தாஜ்மகாலைச் சுற்றிக்காட்டிவருகிறார். 

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு தாஜ்மகாலைச் சுற்றிக் காட்டிய வழிகாட்டியின் பெயர் நிதின் குமார் சிங். அவர்தான், தொடர்ச்சியாக இந்தியாவுக்கு வருகை தரும் வி.வி.ஐ.பிகளுக்கு தாஜ்மகாலைச் சுற்றிக்காட்டுகிறார். அவர்தான் இன்று டொனால்ட் டிரம்புக்கும் அவரது மனைவி மெலனியா டிரம்புக்கு தாஜ்மகால் கட்டப்பட்ட விதம் குறித்தும் அதனுடைய சிறப்புகள் குறித்தும் விளக்கினார்.

முன்னதாக, தாஜ்மகாலைப் பார்வையிட வந்த பிரேசில் அதிபர் ஜேர் மெஸ்ஸியஸ்போல்ஸ்நரோவுக்கும் தாஜ்மகாலைச் சுற்றிக்காட்டினார். அதேபோல, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு சுற்றிக்காட்டியுள்ளார்.

டிரம்புக்கு தாஜ்மகாலைச் சுற்றிக்காட்டியது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதின் குமார் சிங், ‘தாஜ்மகாலை எல்லா விவரங்களையும் டொனால்டு டிரம்புக்கு மெலனியா டிரம்புக்கும் எடுத்துரைத்தேன். ஆச்சர்யமானது(Incredible) என்ற வார்த்தைதான் தாஜ்மாகாலைப் பார்த்தவுடன் அவர்கள் தெரிவித்தது’ என்று தெரிவித்தார்.

Also see:

 

First published:

Tags: Trump India Visit