Home /News /national /

பஞ்சாப் முதல்வர் திருமணத்திற்கு பாஜக தலைவரின் ரூ.568 மதிப்புள்ள பரிசு... அது என்ன தெரியுமா?

பஞ்சாப் முதல்வர் திருமணத்திற்கு பாஜக தலைவரின் ரூ.568 மதிப்புள்ள பரிசு... அது என்ன தெரியுமா?

பஞ்சாப் முதல்வர் திருமணத்திற்கு பாஜக தலைவரின் ரூ.568 மதிப்புள்ள பரிசு

பஞ்சாப் முதல்வர் திருமணத்திற்கு பாஜக தலைவரின் ரூ.568 மதிப்புள்ள பரிசு

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானின் திருமண விழாவிற்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

    நகைச்சுவை நடிகராக இருந்து அரசியல்வாதியாகவும், பஞ்சாப் முதலமைச்சராகவும், உயர்ந்த பகவந்த் மான், டாக்டர் குர்ப்ரீத் கவுரை இன்று சண்டிகரில் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். அவரது திருமணத்திற்கு ஒரு நாள் முன்பு, பாஜக தலைவர் தஜிந்தர் சிங் பக்கா பஞ்சாப் முதலமைச்சருக்கு தனது வாழ்த்துக்களை அனுப்பினார்.

    பாஜக தலைவர் தஜிந்தர் சிங் பக்கா பகவந்த் மானின் திருமணத்திற்கு பரிசாக வழங்கிய 568 ரூபாய் மதிப்புள்ள பூச்செடியின் ஸ்கிரீன் ஷாட்டை ட்விட்டரில், பகிர்ந்துள்ளார். பகவந்த் மானுக்கு திருமண நாளில் வழங்கப்படும் பூங்கொத்து ஒன்றை ஆர்டர் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தஜிந்தர் சிங் பக்கா மற்றும் பகவந்த் மான் ஆகிய இரு தலைவர்களும் நண்பரும் அல்ல எதிரியும் அல்ல என்பது மாதிரியான உறவு கொண்டவர்கள். ஒருமுறை தஜிந்தர் சிங் பக்கா, பகவந்த் மானை 'காமெடி முதல்வர்' என்று கூட அழைத்துள்ளார்.



    பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானின் திருமண விழாவிற்கு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர். இந்த திருமணத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் ராகவ் சத்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பகவந்த் மானின் மனைவி குர்ப்ரீத் கவுர் யார்? குருக்ஷேத்ரா மாவட்டத்தின் பெஹோவா நகரைச் சேர்ந்தவர் 32 வயதான குர்பிரீத் சிங் கவுர். விவசாயியின் மகளான இவரது குடும்பத்தினரும் பகவந்த் மானின் குடும்பத்தினர் பல ஆண்டுகளாகவே குடும்ப நண்பர்களாக உள்ளனர்.

    சுட்டுக்கொல்லப்பட்ட 2 தமிழர்கள்.. மியான்மர் எல்லையில் தமிழர் நகரம்

    ஊடகங்களின் வெளியான தகவலின்படி, பக்வந்த் மானின் சகோதரி மற்றும் தாய் இருவருமே அவர் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்பினர், மணமகளைத் தேடும் பொறுப்பையும் அவர்களே ஏற்றனர். குர்பிரீத் சிங் கவுர் ஹரியானாவைச் சேர்ந்த மருத்துவர். அம்பாலாவில் மருத்துவம் படித்த இவரது குடும்பம் ஆறு மாதங்களுக்கு முன்பு பஞ்சாபில் உள்ள மொஹாலிக்கு குடிபெயர்ந்தது. இவரது மூத்த சகோதரிகள் இருவரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.

    குர்ப்ரீத் கவுர் ஹரியானாவில் உள்ள மகரிஷி மார்க்கண்டேஷ்வர் மருத்துவக் கல்லூரியில் தங்கப் பதக்கம் வென்றவர் என்றும் கூறப்படுகிறது. டாக்டர் குர்ப்ரீத் கவுர் 48 வயதான ஆம் ஆத்மி கட்சித் தலைவர் பகவந்த் மானுக்கு அவரது தேர்தல் பிரச்சாரங்களில் உதவியதாகவும் கூறப்படுகிறது.

    பகவந்த் மான் தனது முதல் மனைவியான இந்தர்ஜித் கவுரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்தார். பகவந்த் மான் மற்றும் அவரது முதல் மனைவிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தர்ப்ரீத் மற்றும் அவரது குழந்தைகள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். கடந்த மார்ச் 16ம் தேதி முதல்வர் பகவந்த் மான் உடைய மகள் சீரத் கவுர் மான்(21) மற்றும் மகன் தில்சான் மன் (17) இருவரும் தனது தந்தையின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிலிருந்து இருந்து இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Punjab

    அடுத்த செய்தி