முகப்பு /செய்தி /இந்தியா / ஆக்ராவில் பலத்த காற்று, இடியுடன் மழை... தாஜ்மஹால் கல்லறை மேற்கூரை சேதம்

ஆக்ராவில் பலத்த காற்று, இடியுடன் மழை... தாஜ்மஹால் கல்லறை மேற்கூரை சேதம்

தாஜ்மஹால் (கோப்புப்படம்)

தாஜ்மஹால் (கோப்புப்படம்)

ஆக்ராவில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. இதனால் மும்தாஜ் கல்லறை மேற்கூரை சேதமடைந்துள்ளதாக தொல்லியல் துறை கூறியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் நேற்றிரவு சூறைக்காற்று மற்றும் இடியுடன் கனமழை பெய்தது. அப்போது தாஜ்மகாலில் இடி தாக்கியது. இதில், மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்ட பளிங்கு கற்களால் ஆன கல்லறையின் மேற்கூரை சேதமடைந்தது.

தாஜ்மகாலை சுற்றி பளிங்கு கற்களால் அமைக்கப்பட்ட தடுப்புகள், மண்பாண்ட அடுக்குகளில் மேற்புரத்தில் உள்ள இரண்டு மண்குடுவைகள் சேதமடைந்துவிட்டதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மேலும், தாஜ்மகாலை சுற்றியுள்ள ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. வியாழக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தாஜ்மகாலுக்கு செல்லும் நடைபாதையில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Also see:

First published:

Tags: Heavy rain, Tajmahal