முகப்பு /செய்தி /இந்தியா / செப் 21 முதல் தாஜ் மகால், ஆக்ரா கோட்டை திறப்பு

செப் 21 முதல் தாஜ் மகால், ஆக்ரா கோட்டை திறப்பு

தாஜ்மஹால் (கோப்புப்படம்)

தாஜ்மஹால் (கோப்புப்படம்)

மத்திய அரசு பல்வேறு தளர்வுகள் அளித்துள்ள நிலையில், சுற்றுலா பயணிகளுக்காக தாஜ்மகால், ஆக்ரா கோட்டை செப்டம்பர் 21-ந்தேதியில் இருந்து மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சுற்றுலா பயணிகளுக்காக தாஜ் மகால் மற்றும் ஆக்ரா கோட்டை செப்டம்பர் 21ம் தேதியில் இருந்து மீண்டும் திறக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல தளர்வுகளை அறிவித்து வருகிறது மத்திய அரசு. அதன் அடிப்படையில், செப்டம்பர் 21-ம் தேதியில் இருந்து சுற்றுலா பயணிகளின் வருகைக்காக தாஜ் மகால், ஆக்ரோ கோட்டை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கவுன்டர்களில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படாது எனவும், ஆன்லைன் மூலமாக மட்டுமே டிக்கெட்டுகளை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உள்ளே வருபவர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க...எல்லையில் பதற்றம்: இந்தியா துப்பாக்கிச்சூடு நடத்தியதாக  சீனா புகார்

தாஜ்மகாலை பார்வையிட ஒரு நாளைக்கு 5000 பேர் அனுமிக்கப்படுவார்கள் எனவும், ஆக்ரோ கோட்டைக்கு தினந்தோறும் 2500 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

First published:

Tags: Taj Mahal, Unlock