காற்றில் வீசிய துர்நாற்றம்.. ஃபிரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட சடலம் - கணவன் கொலையில் மனைவி பகீர் வாக்குமூலம்

மாதிரிப்படம்

சித்திக் மனைவிக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையே தொடர்பு இருந்ததை அக்கம்பக்கத்தினர் மூலம் காவல்துறையினர் தெரிந்துக்கொண்டனர்.

  • Share this:
    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த டெய்லர் ஒருவர்  பூட்டிய வீட்டில் ஃபிரிட்ஜில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

    ஹைதராபாத்தை சேர்ந்த டெய்லர் சித்திக் அகமது. இவருக்கு ரூபினா என்ற மனைவியும் குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூபினா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். ஊரில் வழக்கமாக நடக்கும் திருவிழாவை காண அவர் குழந்தைகளுடன் சென்றுள்ளார். சித்திக் ஹைதராபாத்தில் இருந்துள்ளார்.

    இந்நிலையில் சித்திக் சகோதரர்  அகமது அவரை தொடர்பு கொண்டுள்ளார். போன் அழைப்பை யாரும் எடுக்கவில்லை. ரூபினாவுக்கு அழைத்த போது, தான் ஊரில் இருப்பதாக தெரிவித்துள்ளார். சித்திக் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறார். சித்திக் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் அகமதுவுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அகமது ஜூப்லி ஹில்ஸ் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

    சித்திக் வீட்டிற்கு வந்த காவல்துறையினர் கதவு வெளிப்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததை கண்டனர். இதனையடுத்து கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்டனர். ஃபிரிட்ஜை திறந்து பார்த்தபோது அங்கு சித்திக் சடலமாக கிடந்துள்ளனர். உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். சித்திக் மனைவிக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையே தொடர்பு இருந்ததை அக்கம்பக்கத்தினர் மூலம் காவல்துறையினர் தெரிந்துக்கொண்டனர். இதன்காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வருவதாகவும் கூறியுள்ளனர்.

    இதனையடுத்து சித்திக் மனைவி ரூபினாவை அவரது ஆண் நண்பரையும் அழைத்து விசாரித்ததில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், “ ரூபினாவும் , சையத் முகமலி அலி இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக பழகிவந்துள்ளனர். இருவரும் தனிமையில் இருப்பதை அவரது கணவர் சித்திக் பார்த்து ஆத்திரமடைந்துள்ளனர். முகமது அலியை வீட்டில் வைத்து தாக்கியுள்ளனர். இதனால் சித்திக் மீது முகமது அலி  ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த சம்பவத்துக்கு பிறகு ரூபினாவுக்கும் அவரது கணவருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்தவர் சித்திக்கை காலி செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளார். இதுகுறித்து முகமது அலியிடம் பேசியுள்ளார்.

    மார்ச் 30-ம் தேதி தனது அம்மா வீட்டுக்கு ரூபினா புறப்பட்டு சென்றுள்ளார். தனது கணவர் வீட்டில் தனியாக இருப்பதை முகமது அலிக்கு தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவில் முகமது அலி ரூபினாவின் கணவர் சித்திக்கை கொலை செய்யும் நோக்கத்தோடு அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். ஸ்கூரு ட்ரைவ் மூலம் இரும்பு க்ரீலை அகற்றிவிட்டு வீட்டின் உள்ளே சென்றுள்ளார். தான் கொண்டு வந்திருந்த இரும்பு ராடால் சித்திக்கை அடித்து கொலை செய்துள்ளார் . உடலை அப்புறப்படுத்த என்ன செய்வது என்று யோசித்த முகமது அலி. வீட்டில் இருந்த ப ஃபிரிட்ஜில் உடலை மறைத்து வைத்துள்ளார். அதன்பின் அங்கிருந்து வெளியேறியுள்ளார். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க வீட்டை வெளிப்பக்கமாக தாழிட்டு சென்றதாகவும், இரும்பு கம்பியை பக்கத்தில் இருந்த நீர்நிலையில் வீசிவிட்டு சென்றுள்ளார்’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
    Published by:Ramprasath H
    First published: