ஹோம் /நியூஸ் /இந்தியா /

நள்ளிரவு நேரம்.. பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த தாசில்தார்..

நள்ளிரவு நேரம்.. பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த தாசில்தார்..

சுமிதா சபர்வால் ஐஏஎஸ்

சுமிதா சபர்வால் ஐஏஎஸ்

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் செயலாளரான பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டின் படுக்கையறைக்குள் நள்ளிரவில் நுழைந்த தாசில்தார் கைது செய்யப்பட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Telangana, India

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் செயலாளராக பணியில் இருப்பவர் பெண் ஐஏஎஸ் அதிகாரி சுமிதா சபர்வால். அவருடைய வீடு ஐதராபாத் நகரில் அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் உள்ளது. இந்த பகுதியில் அதிகப்படியான பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமிதா சபர்வாலின் வீட்டிற்குள் ஒரு நபர் அத்துமீறி நுழைந்துள்ளார். அத்துடன், அவருடைய படுக்கை அறை வரை சென்று விட்டார் என்று கூறப்படுகிறது.

மர்ம நபர் வீட்டிற்குள் ஊடுருவி இருப்பதை கவனித்த சுமிதா சபர்வால், உடனடியாக வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தார். வீட்டுக்குள் விரைந்து சென்ற போலீசார் அந்த நபரை பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் .விசாரணையில் அவர் பெயர் ஆனந்த் என்பதும், அவர் துணை தாசில்தாரராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும், வீட்டிற்கு வெளியே காரில் காத்திருந்த ஆனந்தின் நண்பர் ஒருவரும் அப்போது கைது செய்யப்பட்டார். இரண்டு பேரிடமும் பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பதவி உயர்வு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரியை நேரில் சந்தித்து பேச வந்ததாக தாசில்தார் ஆனந்த் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, தாசில்தார் மற்றும் அவருடைய நண்பர் ஆகியோர் மீது உயர் அதிகாரி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது, அச்சத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு அவர், “ஒரு நள்ளிரவில் ஒரு நபர் என் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். தைரியமான எண்ணம் காரணமாக நான் என்னை தற்காத்துக்கொண்டேன். நீங்கள் எவ்வளவு பாதுகாப்பானவர் என்று நினைத்தாலும்- எப்போதும் கதவுகள் அல்லது பூட்டுகளை சரியாக பூட்டப்பட்டுள்ளதாக என்பதை சரிபார்க்கவும்” என்று குறிப்பிட்டார்.

First published:

Tags: Crime News, Telangana