தற்சார்பு இந்தியா முயற்சி ரவீந்திரநாத் தாகூரின் சிந்தனை சாராம்சமே: பிரதமர் மோடி பேச்சு

தற்சார்பு இந்தியா முயற்சி ரவீந்திரநாத் தாகூரின் சிந்தனை சாராம்சமே: பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தின் விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

  • Share this:
மேற்கு வங்கத்தின் விஸ்வ பாரதி பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

அப்போது அவர் பேசியதாவது:

விஸ்வ பாரதியின் நூறாண்டுகள் என்பது ஒவ்வொரு இந்தியரின் பெருமையாகும். குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் சிந்தனாபூர்வ கருத்துக்களின் பிரதிபலிப்புதான் விஸ்வபாரதி. இந்த இடம் பல விஞ்ஞானிகளுக்கு, கலைஞர்களுக்கு, பிற துறை நிபுணர்கள் பலருக்கு ஆற்றலை வழங்கியுள்ளது

தாகூர் அமைத்துக் கொடுத்த வழியின்படி விஸ்வபாரதி ஓய்வின்றி பணியாற்றி வருகிறது. விஸ்வபாரதி நாட்டுக்கு அளித்துள்ள செய்தியை நம் நாடு உலகிற்கு எடுத்துச் செல்கிறது.

பருவநிலை மாற்றத்தை தடுக்கும் நோக்கத்திற்கான பாரீஸ் ஒப்பந்தத்தை அமல்படுத்த இந்தியா மட்டுமே சீரிய முறையில் பணியாற்றி வருகிறது.

இந்தப் பல்கலைக் கழகம் நிறுவப்பட்ட வரலாற்று சூழ்நிலையை நாம் பார்க்க வேண்டும். சுதந்திரப் போராட்டம் என்றால் நம் மனதுக்கு வருவது 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகள். சுதந்திரப் போராட்டத்திற்கான கருத்துகளை வழங்கியது நமது பக்தி மரபுதான்.

பக்தி இயக்கக் காலக்கட்டத்தில் சீர்த்திருத்தவாதிகள் வழங்கியளித்த கருத்துக்கள் ஒரு பிரதேசம் சார்ந்தது மட்டுமல்ல. இது கூட்டு அகக்காட்சியையும் தற்சார்பையும் மக்களுக்கு எடுத்துரைத்தது.

நாம் பக்தி இயக்கத்தை ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற மகானை விடுத்து பேச முடியாது, அவரால்தான் நமக்கு விவேகானந்தர் கிடைத்தார்.

பெனாரஸ் இந்து பல்கலைக் கழகம், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகம் உட்பட பல பல்கலைக் கழகங்கள் இந்தக் காலக்கட்டத்தில்தான் நிறுவப்பட்டன.

பக்தி இயக்கம் நம்மை ஒன்றிணைத்தது. இந்த பல்கலைக் கழகங்கள் கொண்டு வந்த பக்தியும் ஞானமும் நமக்கு லட்சியத்தை கொடுத்தன. கர்ம இயக்கம் நம் உரிமைகளுக்காக நாம் எழுந்து நிற்க வலு கொடுத்தது. பல நூற்றாண்டுகளுக்கான இயக்கமாகும் இது.

விஸ்வபாரதி பல்கலைக் கழகம் நம் நாட்டுக்கும் உலகிற்கும் இடையே ஒத்திசைவை கொண்டு வருகிறது. தற்சார்பு இந்தியா என்ற கொள்கையும் இங்கிருந்துதான் உத்வேகம் பெற்றது. நம் வளர்ச்சி என்பது நம் நாட்டு வளர்ச்சிக்கானது மட்டுமல்ல உலகனைத்திற்கும் நன்றாக இருப்பதற்கான வளர்ச்சி.

தற்சார்பில் ஆத்மசக்தி பற்றி குருதேவ் பேசியுள்ளார். வங்காளத்தில் எண்ணற்றவர்கள் நாட்டுக்காகத் தியாகம் செய்துள்ளனர். 2022-ல் நாம் நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடவிருக்கிறோம். குருதேவின் லட்சியங்கள் காட்டும் பாதையில் நம் புதிய லட்சியங்கள் இருக்கும்.

கலையும் இசையும் இல்லாமல் ஒரு நாடு தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முடியாது என்று தாகூர் கூறுவார். குருதேவின் முக்கியமான மந்திரம் என்னவெனில், ‘யாரும் உங்கள் பேச்சுக்கு காது கொடுக்கவில்லையா தனியாக நடங்கள் என்றார். அனைவருடன் இணைந்து வாழக் கற்றுக் கொடுப்பது எதுவே அதுவே கல்வி என்பார் குருதேவ். கல்வி யாரையும் குறுக்கி விடக்கூடாது என்பார் அவர்.

இன்று நாடு புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தவிருக்கிறது. விஸ்வபாரதிக்கு 100 ஆண்டுகள் இதில் பணியாற்றிய அனுபவம் உள்ளது.

நான் குருதேவின் வார்த்தைகளுடன் முடிக்கிறேன், “இல்லத்தரசர்களே கதவைத் திறந்து வையுங்கள், வசந்தகாலம் வந்து விட்டது”

மாற்றத்தைத் தழுவ நாம் திறந்த மனதுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Published by:Muthukumar
First published: