டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் - இந்தியா வர 10 ஆண்டுகள் தடை

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டைச் சேர்ந்த 960 பேர், 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் - இந்தியா வர 10 ஆண்டுகள் தடை
தப்ளிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: June 4, 2020, 8:49 PM IST
  • Share this:
டெல்லி நிஜாமுதீன் பகுதியில், கடந்த மார்ச் 13-ம் தேதி தப்லீக் ஜமாத் அமைப்பின் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் மற்றும் தாய்லாந்து, இந்தொனேஷியா போன்ற வெளிநாடுகளிலும் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதனைதொடர்ந்து நாடு முழுவதும் கொரோனா பரவிய நிலையில், அதில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் அதிகளவில் இருந்தனர். இதனைதொடர்ந்து விசா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரின் விசாவும் ரத்து செய்யப்பட்டது.

அதேபோல் டெல்லி குற்றப்பிரிவு போலீசார், மாநாட்டில் கலந்துகொண்ட 541 வெளிநாட்டினர் மீதும் புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.


இந்தநிலையில், மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டை சேர்ந்த 2200 பேர் 10 ஆண்டுகளுக்கு இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விசாவில் வந்து விதிகளை மீறி நடந்து கொண்டதாக கூறி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Also See: சீனாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்


First published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading