• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஆபத்தான காற்று மாசு: இந்தியா - நியூசி., அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நடைபெறுமா?

ஆபத்தான காற்று மாசு: இந்தியா - நியூசி., அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நடைபெறுமா?

ஆபத்தான காற்று மாசு: இந்தியா - நியூசி., அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நடைபெறுமா?

ஆபத்தான காற்று மாசு: இந்தியா - நியூசி., அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நடைபெறுமா?

டெல்லியில் கடுமையான காற்று மாசு நிலவுவதால், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  • Share this:
    டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசை குறைக்க, படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 

    டெல்லியில் தீபாவளி பண்டிகைக்கு வெடித்த பட்டாசுகளுடன், அருகில் உள்ள பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் எரிக்கும் பயிர்க்கழிவு புகையுடன் சேர்ந்து, கடும் காற்று மாசு நிலவுகிறது.

    அதிகபட்சமாக ஹரியானா மாநிலம் குருகிராமில் காற்று மாசு அளவு 348 புள்ளிகளும், டெல்லியில் 346 புள்ளிகளும் கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல், நொய்டாவில் 320 புள்ளி காற்று மாசும், பாட்னா, போபால், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் 300 புள்ளிகளை நெருங்கியே காற்று மாசு கண்டறியப்பட்டுள்ளது.

    இதனால், டெல்லியில் கடந்த சில நாட்களாக மூச்சுத் திணறல், நுரையீரல் கோளாறு போன்ற பிரச்சனைகளால் மருத்துவமனைக்கு செல்வோரின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என Local circles என்ற இணையதளம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனிடையே, காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பான வழக்கை, திங்கட்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், கட்டுமான நடவடிக்கைகள், தேவையற்ற வாகனப் பயன்பாடு மற்றும் அனல் மின் நிலையங்கள் போன்றவையே காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணம் என தெரிவித்தது.

    இதையடுத்து, மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்த டெல்லி அரசு, அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுவதை கட்டுப்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் காற்று மாசு அக்டோபர், நவம்பர் மாதங்களில் மட்டுமே இருப்பதாகவும், ஆனால், டெல்லியில் ஆண்டு முழுவதும் காற்று மாசு தொடர்வதாகவும் தெரிவித்தனர்.

    இருப்பினும், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் வைக்கோல் எரிப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மத்திய அரசு, மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தவும் உத்தரவிட்டனர். இதையடுத்து, முதற்கட்டமாக 3 நாட்களுக்கு டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அரசு ஊழியர்கள் வீடுகளில் இருந்தே பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அத்துடன், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் ஆலோசனைக்குப் பிறகு மேலும் சில கட்டுப்பாடுகளோ, டெல்லி மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கோ கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இதேபோல், அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே புதன்கிழமை நடத்த திட்டமிடப்பட்டுள்ள முதலாவது டி20 போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: