லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத்தடை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

லோக் ஆயுக்தா வழக்கு விசாரணையை ஏப்ரல் 22-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Web Desk | news18
Updated: April 6, 2019, 11:29 AM IST
லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்துக்கு இடைக்காலத்தடை:  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை
Web Desk | news18
Updated: April 6, 2019, 11:29 AM IST
லோக் ஆயுக்தா உறுப்பினர்கள் நியமனத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி, இரண்டு உறுப்பினர்களின் நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத்தடை விதித்துள்ளது.

தமிழக லோக் ஆயுக்தா அமைப்பிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு கடந்த ஒன்றாம் தேதி அரசாணை வெளியிட்டது. அதன்படி லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ் மற்றும் உறுப்பினர்களாக முன்னாள் மாவட்ட நீதிபதிகள் ஜெயபாலன், கிருஷ்ணமூர்த்தி, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜாராம், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் ஆறுமுகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசியல் கட்சியைச் சேர்ந்த ஆறுமுகம், நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜாராம் ஆகியோர் உறுப்பிர்களாக நியமிக்கப்பட்டது லோக் ஆயுக்தா அமைப்பின் விதிகளுக்கு முரணானது. எனவே அவர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரின் நியமனத்திலும் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்பது தெரிகிறது என்று கூறிய நீதிபதிகள், இருவரது நியமனத்திற்கும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 22-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Also see... மக்களவைத் தேர்தல் கருத்துக்கணிப்பு! எந்த கட்சிக்கு எத்தனை? 
Loading...
Also Read...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

ஐ.பி.எல் தகவல்கள்
POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:


SCHEDULE TIME TABLE:
First published: April 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...