• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மம்தா பானர்ஜியின் ஒரு மாத சக்கர நாற்காலி பிரச்சாரம்: சாதகமா? பாதகமா?

மம்தா பானர்ஜியின் ஒரு மாத சக்கர நாற்காலி பிரச்சாரம்: சாதகமா? பாதகமா?

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் சக்கர நாற்காலியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறதா அல்லது தனிப்பட்ட கவர்ச்சியை இழந்து விட்டாரா?

  • Share this:
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடிக்கு எதிரான தேர்தலாகவே மாற்றியிருக்கிறார் மம்தா பானர்ஜி. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் திரிணாமுல் காங்கிரஸை நீக்கிவிட்டு மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு முன்னெடுப்போம் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி நந்திகிராமில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் தொகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வந்த சமயத்தில் பெருந்திரளான கூட்டத்தினரால் மம்தாவுக்கு காலில் அடிபட்டது. அதன் பிறகு சிகிச்சை பெற்று வீல் சேரில் பிரச்சாரத்தை துவக்கினார் மம்தா. அன்று முதல் இன்று வரை வீல் சேரிலேயே அவர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால் தன்னுடைய பிரச்சாரங்களில் அவர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சிக்கத்தொடங்கியுள்ளார். பாஜக தன்னை கொலை செய்ய சதி செய்வதாக கூட அவர் குற்றம் சுமத்தினார். ஆனால் இது மம்தா பானர்ஜிக்கு தேர்தலில் சாதகமான முன்னேற்றத்தை தருமா? வரலாறு வேறு விதமாக கூறுகிறது. இது தவிர சக்கர நாற்காலி பிரச்சாரம் அவருக்கு அனுதாபத்தை ஏற்படுத்தித் தருவதைக் காட்டிலும் அவரை கட்டுப்படுத்தி வைத்திருப்பதாக பாஜகவினர் கூறுகின்றனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற அரசியல்வாதிகள், பிரதமர் மோடியை கடுமையாக எதிர்ப்பதைக் காட்டிலும் வேறு விதமாகவே அவரை கையாண்டிருக்கின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பிரதமரை பொய்யர் என்று கூட கெஜ்ரிவால் விமர்சித்தார், ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மீதான அனைத்து தாக்குதல்களையும் அவர் தவிர்த்துவிட்டு பாஜகவில் முதல்வர் வேட்பாளர் இல்லாததும், தன்னுடைய வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்தார்.

பிரதமர் மோடி மீதான தாக்குதல்கள் அவருக்கு பலனளிப்பதாகவே வரலாறு கூறுகிறது. இதற்கு ஒரு நல்ல உதாரணம் தான் 2019 நாடாளுமன்ற தேர்தல். ரஃபேல் கொள்முதலை ஊழல் என கூறி ‘நாட்டின் பாதுகாவலர் ஒரு திருடன்’ என ராகுல் காந்தி பிரதமர் மோடியை தாக்கி பிரச்சாரம் செய்தார். ஆனால் ராகுல் காந்தியின் அந்த பிரச்சாரம் அவருக்கு துளியும் உதவவில்லை.

மேற்குவங்கத்தில் தற்போது இதையே தான் மம்தா பானர்ஜியும் கடைபிடிக்கிறார். மோடியின் முகத்தை மாநில மக்கள் பார்க்க விரும்பவில்லை என பலவிதமாக மோடி மீதான தாக்குதலை கையில் எடுத்துள்ளார் மம்தா பானர்ஜி. ஆனால் பல பரப்புரைகளிலும் ஏன் மம்தா என்னை அவமதிக்கிறார்? இது தோல்வியின் மீதான அவரின் மனநிலையை காட்டுகிறது என்று பிரதமர் மோடி எதிர் கோஷமிட்டு வருகிறார்.

இது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், பிரதமர் மோடி ஒரு பிரபல ஆளுமை, அவரை அவதூறாக பேசுவதன் மூலம் அவருக்காக நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களை அதிருப்திக்குள்ளாக்குவீர்கள், இந்தத் தாக்குதல்கள் இல்லை என்றால் கூட நீங்கள் வெற்றி பெற வாய்ப்புண்டு என்றார்.

வீல்சேர் அனுதாபம்:

இன்றுடன் மம்தா பானர்ஜி வீல் சேரில் பரப்புரைகள், பிரச்சாரம் என ஒரு மாதத்தை நிறைவுசெய்துள்ளார். இது வாக்காளர்களின், குறிப்பாக பெண் வாக்காளர்களின் அனுதாபத்திற்கானது என அவரின் எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பாஜகவினர் இது தொடர்பாக கூறுகையில் உண்மையில் மமதாவின் பிரச்சாரம் அவருக்கு அனுதாபத்தை கொடுக்கவில்லை, மாறாக அவரை கட்டுப்படுத்தி தான் வைத்துள்ளது. ஒவ்வொரு தலைவருக்கும் என பிரத்யேக ஸ்டைல் இருக்கிறது. மம்தா போன்றவர் மேடையின் நாலாபுறமும் சென்று மக்களை சந்திக்க வேண்டும், கிராமங்களுக்குள் நடந்து பிரவேசிக்க வேண்டும், கடைகளுக்குள் சென்று கவர வேண்டும், மக்களிடம் திறந்த மனதுடன் பேசியிருக்க வேண்டும், ஆனால் இது எதுவுமே நடக்கவில்லை என்று குறிப்பிட்டார். இருப்பினும் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு தனது பேச்சில் ஆக்ரோஷத்தை காட்டி மம்தா ஈடுகட்டியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

மம்தா கவர விரும்பும் பெண் வாக்காளர்களில் இம்முறை பாதிபேர் அவருக்கு ஆதரவாக இருந்தாலும், பாதி பேர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் அதிருப்தியடைந்து இம்முறை பாஜகவுக்கு வாக்களிக்கலாம். ஒரு மாதமாக மம்தாவின் கால் சரியாகாதது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது என ஒரு பாஜக தலைவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: