• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மதுபான டெலிவரியைத் தொடங்கிய ஸ்விகி நிறுவனம்!

மதுபான டெலிவரியைத் தொடங்கிய ஸ்விகி நிறுவனம்!

ஸ்விகி

ஸ்விகி

நாடு முழுவதும் மதுபானங்களை டெலிவரி செய்வதற்கு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக ஸ்விகி தெரிவித்துள்ளது.

  • Share this:
    ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஸ்விகி நிறுவனம் மதுபானங்களையும் டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளது.

    கொரோனா பரவலைத் தவிர்க்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஆன்லைன் மூலம் மதுபானங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

    இந்தநிலையில், ஸ்விகி உணவு டெலிவரி செய்யும் நிறுவனம், மதுபானங்களை டெலிவரி செய்யும் பணியைத் தொடங்கியுள்ளது. தற்போது, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மட்டும் மதுபான டெலிவரியை ஸ்விகி தொடங்கியுள்ளது. மேலும், நாடு முழுவதும் மதுபானங்களை டெலிவரி செய்வதற்கு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக ஸ்விகி தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ஸ்விகி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போதுள்ள தொழில்நுட்பம் மற்றும் கட்டமைப்பின் மூலம் சிறிய சிறிய பகுதிகளுக்கும் டெலிவரி செய்ய முடிகிறது. நாங்கள், உள்ளூர் அதிகாரிகளுடன் நெருங்கி பணியாற்றிவருகிறோம். அதன்மூலம், மளிகை பொருள்களையும் டெலிவரி செய்ய முடியும். மதுபானத்தை வீடு தேடிவந்து பாதுகாப்பான முறையில் டெலிவரி செய்யப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளது.





    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: