ஹோம் /நியூஸ் /இந்தியா /

லிவ் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்வீட்டி படேல் வழக்கில் அவிழ்ந்த மர்ம முடிச்சுகள்.. கையும் களவுமாக சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

லிவ் இன் ரிலேஷன்ஷிப்.. ஸ்வீட்டி படேல் வழக்கில் அவிழ்ந்த மர்ம முடிச்சுகள்.. கையும் களவுமாக சிக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்

sweety patel

sweety patel

அஜய் மற்றும் ஸ்வீட்டி இவர்களுக்கு இடையே 2015-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மர்மமான முறையில் பெண் மாயமான வழக்கில் அவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  குஜராத்தை சேர்ந்த ஸ்வீட்டி படேல் என்கிற 37 வயது மதிக்கத்தக்க பெண்ணை காணவில்லை என அவரது சகோதரர் ஜூன் மாதம் 5-ம் தேதி காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கிறார். அமெரிக்காவை சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி விவாகரத்து ஆன நிலையில் வதோரா காவல்நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அஜய் தேசாய் உடன் லிவ் இன் ரிலேஷன் ஷிப்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அஜய் தேசாய் ஒரு போலீஸ் அதிகாரி என்பதால் அவரிடம் விசாரணை மேற்கொள்வதில் சிக்கல் இருந்தது. தடயங்கள் எதுவும் கிடைக்காததால் இந்த வழக்கு போலீஸாருக்கு சிக்கலாக இருந்தது.

  Also Read:  மாமல்லபுரம் அருகே விபத்தில் சிக்கி நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்.. தோழி உயிரிழப்பு

  இந்நிலையில் ஸ்வீட்டி படேல் உடல் எரிந்த நிலையில் அவரது குடியிருப்பில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கட்டுமானப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. வதோரா காவல்துறையினர் இந்த வழக்கை ஆமை வேகத்தில் நகர்த்திக்கொண்டிருந்தனர். இதனையடுத்து இந்த வழக்கானது அகமதாபாத் க்ரைம் பிரான்சுக்கு மாற்றப்பட்டது. க்ரைம் பிரான்ச் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். நர்கோ பரிசோதனைக்கு அஜய் மறுக்கவே அவர்மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுக்கத் தொடங்கியது. இதனையடுத்து அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கத் தொடங்கினர்.

  இந்நிலையில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அகமதாபாத் க்ரைம் பிரான்ச் போலீஸார் இந்த வழக்கில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்த்தனர். “அஜய் தேசாய் ஸ்வீட்டி படேலை கொலை செய்து அவரது உடலை தனது நண்பரின் ஹோட்டலில் வைத்து எரித்துவிட்டதாக “ கூறினர். இதுகுறித்து பேசிய போலீஸார். “ அஜய் மற்றும் ஸ்வீட்டி இவர்களுக்கு இடையே 2015-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது அஜய் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தனியாக இருந்துள்ளார். ஸ்வீட்டிக்கு அமெரிக்காவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்திருந்த நிலையில் அது விவாகரத்தில் முடிந்தது.

  Also Read: மாப்பிள்ளையின் நண்பர்கள் கொடுத்த கிஃப்டை கடுப்பில் தூக்கி வீசிய மணப்பெண்...

  கோயிலில் தாலிக்கட்டிக்கொண்டனர் எனக் கூறுப்படுகிறது. முறையாக திருமணம் பதிவு செய்யவில்லை. இருவரும் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். இதன்மூலம் இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில்தான் அஜய் வேறு ஒருபெண்ணை முறைப்படி திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அதன்பின்னும் ஸ்வீட்டி படேலுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

  அஜய் வேறு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நீங்கள் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டால் நான் யார் உங்களுக்கு. என்னை நீங்கள் முறைப்படி திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஸ்வீட்டியை கொலை செய்யும் முடிவுக்கு அஜய் வந்துவிட்டார். ஜூன் 4-ம் தேதி இரவு ஸ்வீட்டி தனது 2 வயது குழந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை அஜய் கொலை செய்துள்ளார். மூச்சுத்திணறி அவர் உயிரிழந்துவிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முதல் மாடியில் இருந்து அவரது சடலத்தை ஒரு துணியில் சுற்றி தனது காருக்கு கொண்டு வந்துள்ளார். அங்கிருந்து காலை எடுத்துக்கொண்டு உபயோகத்தில் இல்லாத தனது நண்பரின் ஹோட்டலுக்கு விரைந்துள்ளார். அங்கு அவரது உடலை எரித்துள்ளார். இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே அஜய் மீது சந்தேகம் இருந்தது. அவரது வீட்டில் இருந்த சிங்க் பைப்பில் இருந்து ரத்த தடயங்களை கண்டெடுத்தோம். ஸ்வீட்டியின் எலும்பு கண்டெடுக்கப்பட்டது. ஸ்வீட்டியின் டிஎன்ஏ அவரது 2வயது மகனின் டிஎன்ஏவுடன் பொருந்தியது.

  தேசாய் முதலில் நர்கோ சோதனைக்கு ஒப்புக்கொண்டார் ஆனால் பின்னர் சோதனைக்கு மறுத்துவிட்டார். இதுவே அவர்மீதான சந்தேகத்தை மேலும் வலுக்கச் செய்தது. விசாரணையின் போது தனக்கு எதுவும் தெரியாது என சொன்னதையே திரும்பக் கூறிவந்தார். அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக கிடைத்த பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்” என்றனர்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Murder, Mysterious death