ஹோம் /நியூஸ் /இந்தியா /

குப்பையில் இருந்து பொம்மைகள் தயாரிக்கும் #SwachhToycathon போட்டி இன்று தொடங்குகிறது!

குப்பையில் இருந்து பொம்மைகள் தயாரிக்கும் #SwachhToycathon போட்டி இன்று தொடங்குகிறது!

toycathon

toycathon

திறமையான வடிவமைப்புகளை அங்கீகரிக்கும் நிகழ்வாக இது இருக்கும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. பாதுகாப்பு தரங்களுக்கு இணங்கக்கூடிய பொம்மைகளை இந்த போட்டிக்கு பதிவிடலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் நடத்தும், கழிவுகளில் இருந்து பொம்மைகளை உருவாக்கும் தனித்துவமான போட்டியான ஸ்வச் டாய்காத்தானை (#SwachhToycathon) இன்று தொடங்கிறது. இப்போட்டியில் தனிநபராகவோ குழுவாகவோ இணைந்து பங்குபெறலாம்.

கழிவுகள், குப்பைகள் அகற்றுவது என்பது இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் பெரும் சவலான பணியாகவே இருந்து வருகிறது. குப்பை மற்றும் கழிவு மேலாண்மை என்பது அவசர காலத்தில் கவனம் செலுத்தவேண்டிய துறையாக உள்ளது. ஸ்வட்ச் பாரத் இயக்கம் மூலம் தூய்மையான இந்தியாவை உருவாக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது.

அதன் மற்றொரு முயற்சியாக உலர் கழிவுகளைப் பயன்படுத்தி பொம்மை வடிவமைப்புகளில் புதுமைகளைக் கொண்டுவர தனிநபர்கள் மற்றும் குழுக்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது. அதற்கு ஸ்வச் டாய்காத்தான் என்று பெயர். ஆண்டுதோறும் நடத்தப்படும் இது இந்த அன்று செப்டம்பர் 26 இன்று தொடங்குகிறது.

கிரியேட்டிவ் லேர்னிங் மையம், ஐஐடி காந்திநகர் இணைந்து இந்த பொடியை நடத்துகிறது. பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டம் 2020 இந்தியாவை உலகளாவிய பொம்மை மையமாக நிறுவும் நோக்கத்துடன் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் மற்றும் கையால் செய்யப்பட்ட பொம்மைகள் உள்ளிட்ட இந்திய பொம்மைத் தொழிலை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

திறமையான வடிவமைப்புகளை அங்கீகரிக்கும் நிகழ்வாக இது இருக்கும் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. பாதுகாப்பு தரங்களுக்கு இணங்கக்கூடிய பொம்மைகளை இந்த போட்டிக்கு பதிவிடலாம். MyGov இன் https://innovateindia.mygov.in/ போர்ட்டலில் போட்டி நடத்தப்படும்.

66% இந்திய விமானிகள் விமானம் ஓட்டும்போது தூங்குகிறார்கள் - பயணிகளை அதிரவைத்த சர்வே முடிவு!

புட் வேஸ்ட் டு பிலே - குப்பைகளை விளையாட்டு பொருளாக மாற்றுங்கள் என்ற கருவோடு தொடங்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள், சுய தொழில் செய்வோர், தனி நபர்கள் என யாரும் கலந்து கொள்ளலாம்.தனியாகவோ குழுவாகவோ சேர்ந்தும் இந்த போட்டியில் தங்கள் திறன்களை வெளிப்படுத்தலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் 14 அமைச்சகங்களுடன் இணைந்து தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறை தற்போது பொம்மைகளுக்கான தேசிய செயல் திட்டத்தின் பல்வேறு அம்சங்களை செயல்படுத்தி வருகிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Government, ToyCathon 2021