Home /News /national /

இந்தோ-பாக் யுத்தத்தின் 50வது ஆண்டு: பிபின் ராவத் பேசிய கடைசி உரை வெளியீடு

இந்தோ-பாக் யுத்தத்தின் 50வது ஆண்டு: பிபின் ராவத் பேசிய கடைசி உரை வெளியீடு

பிபின் ராவத்

பிபின் ராவத்

இந்தியா பாகிஸ்தான் இடையே  கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின் 50வது ஆண்டு விழாவையொட்டி ராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவில், நமது ராணுவத்தால் நாம் பெருமை அடைகிறோம் என்று மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பேசியுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்தியா பாகிஸ்தான் இடையே  கடந்த 1971ம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின் 50வது ஆண்டு விழா Swarnim Vijay Par என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பேசிய கடைசி உரையை ராணுவம் வெளியிட்டுள்ளது.

    இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்த பின்னர், மேற்கு பாகிஸ்தான் கிழக்கு பாகிஸ்தானுக்கு போதிய நிதியுதவியும் அங்கீகாரமும் அளிக்காமல்  இருந்து வந்தது.இது போர் என்னும் சூழலுக்கு இட்டு சென்றது. 1971 டிசம்பர் 3ஆம் நாள் களத்தில் இறங்கியது இந்தியாவும் பாகிஸ்தானும். இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் ராணுவம், டிசம்பர் 16ம் தேதி 93 ஆயிரம் வீரர்களுடன் நிபந்தனையின்றி சரணடைந்தது.

    13 நாட்கள் நடைபெற்ற இந்தப் போர் சரித்திரத்தின் பக்கங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, பங்களாதேஷ் என்ற தனி நாட்டை உருவாக்கியது. இந்த போரில் 50வது ஆண்டு பொன்விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    டெல்லியில் இந்தியா கேட்டில் இதனை கொண்டாடுவதற்காக பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததன் காரணமாக எளிமையாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 1971ம் ஆண்டு யுத்தம் தொடர்பாக பிபின் ராவத் இறப்பதற்கு முன்பாக பேசியிருந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது.



    வீடியோவில், ஸ்வர்னிம் விஜய் பர்வ் விழாவில் இந்திய ஆயுதப்படையின் அனைத்து துணிச்சலான வீரர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 1971 போரில் வெற்றி பெற்றதன் 50வது ஆண்டு விழாவை விஜய் பர்வமாக கொண்டாடுகிறோம். இந்தியா கேட்டில் டிசம்பர் 12 முதல் 14 வரை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நமது வீர வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்ட அமர் ஜவான் ஜோதி வளாகத்தில் விஜய் பர்வ் நடத்தப்படுவது பெருமைக்குரியது என்று பிபின் ராவத் பேசியுள்ளார். நமது ராணுவத்தால் நாம் பெருமை அடைகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: இந்தியாவில் பெண் தொழிலாளர் வருமானம் 18% ஆக குறைவு.. அதிர்ச்சி ரிப்போர்ட்...


    இந்த விழாவை தொடங்கி வைத்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங்,  பிபின் ராவத்தை இழந்து நாடு சோகத்தில் மூழ்கி இருப்பதால் இவ்விழா எளிமையாக கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்தார். வங்கதேசத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட இந்தியா பெரும் பங்காற்றியுள்ளது என்று குறிப்பிட்ட அவர், கடந்த 50 ஆண்டுகளில் வங்கதேசம் வளர்ச்சி பாதையில் முன்னேற்றம் அடைந்திருப்பதை கண்டு இந்தியா மகிழ்ச்சி கொள்கிறது எனவும் கூறினார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Army Chief General Bipin Rawat, Indian army

    அடுத்த செய்தி