கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் எழுதியுள்ள சுயசரிதை புத்தகம் கேரளா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த முறை பினராயி விஜயன் முதல்வராக இருந்த போது 2020 ஆம் ஆண்டு கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தி வந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளா அரசியலில் பெரும் சூறாவளியை உருவாக்கிய இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் ஸ்வப்னா சுரேஷ். முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நெருக்கமாக இருந்த கேரள மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் என்பவருடன் ஸ்வப்னா சுரேஷ் நெருக்கமாக பழகி வந்தார். இந்த பழக்கத்தை ஸ்வப்னா சுரேஷ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனையடுத்து ஜாமீனில் வெளி வந்த ஸ்வப்னா சுரேஷ் தனது சுயசரிதை புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய சிவசங்கர் இடையே தனிப்பட்ட உறவின் ஆழத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளிவராத பல புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் அந்த புத்தகத்தில் சிவசங்கர், முதல்வர் பினராயி விஜயன் மற்றும் முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
ஸ்வப்னா சுரேஷ் எழுதி உள்ள 'சதியுடே பத்ம வியூகம் என்ற புத்தகம் கடந்த 12ஆம் தேதி வெளியானது. இதில் ஸ்வப்னா சுரேஷ் ’முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரன் என்னிடம் மிகவும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் உள்ளன என்றும் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்’என்று உறுதியாக சொன்னதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கேரளா முன்னாள் அமைச்சர் ஒருவர் எனக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னை ஓட்டலுக்கு அழைத்து சென்போனில் அனுப்பிய வாட்ஸ்அப் குறுந்கவல்கள் பல இப்போதும் தன்னிடம் உள்ளன என்றும் ஏற்கனவே இந்த தகவலை விசாரணை அதிகாரிகளிடம் கொடுத்து உள்ளதாகவும் எழுதியுள்ளார்.
பினராயி விஜயன் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த வழக்கில் இருந்து உங்களை காப்பாற்றுவோம் என்று கூறினார்கள். அதனால் தான் , அரசுக்கோ, முதல்வருக்கோ தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்பு இல்லை என சிறையில் இருந்து ஆடியோ வெளியிட்டேன் என்பது உள்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அந்த சுயசரிதை புத்தகத்தில் ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.
முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் , கேரள முன்னாள் அமைச்சர் ஜலீல், முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி நளினி நட்டோ உள்ளிட்ட பலருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுவப்னா சுரேஷ் அந்த புத்தகத்தில் எழுதி உள்ளார். சுவப்னா சுரேஷ் சுயசரிதை புத்தகம் மீண்டும் கேரள அரசியலில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும், தங்கம் கடத்தல் வழக்கு சூடுபிடிக்கும் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதையும் படிங்க: பேஸ்புக்கில் மர்ம ஹைக்கூ கவிதை.. இரண்டாவது நரபலியின்போது எழுதி பதிவிட்ட கொலையாளி!
இந்த வழக்கில் சிறையில் இருந்து 98 நாட்களுக்கு பிறகு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த உடன் சிவசங்கரன் சுயசரிதை புத்தகம் எழுதி வெளியிட்டார். அந்த புத்தகத்தில், தங்கம் கடத்தல் வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் சுவப்னா சுரேஷ் கல்வித்தகுதியை பார்க்காமல் ஸ்பேஸ் பார்க்கில் அவரை வேலைக்கு சேர்த்தது தான் தவறு. அதற்காக என்னை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்தார்கள் என குறிப்பிட்டு இருந்தார்.
”ஸ்வப்னா சுரேஷ தான் பெரிய சதி செய்து என்னை மாட்டி விட்டார். அவர் கடத்தலில் ஈடுபடுவார் என்று நான் நினைக்கவில்லை'' என்பது உள்பட பல்வேறு கருத்துக்களை அந்த சுயசரிதை புத்தகத்தில் எழுதி இருந்தார். இந்த நிலையில் சிவசங்கரனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுவப்னா சுரேஷ் சுயசரிதை புத்தகம் எழுதி உள்ளார். தற்போது இந்த சுயசரிதை புத்தகம் கேரளா அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kerala CM Pinarayi Vijayan, Kerala government, Swapna Suresh