ஹோம் /நியூஸ் /இந்தியா /

'படுக்கைக்கு அழைத்தனர்'... மாஜி அமைச்சர்கள் மீது ஸ்வப்னா சுரேஷ் பாலியல் புகார்.. கேரளா அரசியலில் பரபரப்பு

'படுக்கைக்கு அழைத்தனர்'... மாஜி அமைச்சர்கள் மீது ஸ்வப்னா சுரேஷ் பாலியல் புகார்.. கேரளா அரசியலில் பரபரப்பு

ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு புகார்

ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு புகார்

ஸ்வப்னா சுரேஷ் முன்னாள் அமைச்சர்கள் கடகம்பள்ளி சேரந்திரன்,தாமஸ் ஐசக் மற்றும் முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kerala, India

  2016 ஆண்டு கேரளா மாநில சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைத்து பினராயி விஜயன் முதலமைச்சராக ஆனார்.  அவரது ஆட்சி நடைபெற்ற  2020 ஆம் ஆண்டு கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தி வந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  கேரளா அரசியலில் பெரும் சூறாவளியை உருவாக்கிய இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டவர் ஸ்வப்னா சுரேஷ். முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு நெருக்கமாக இருந்த கேரள மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரன் என்பவருடன் ஸ்வப்னா சுரேஷ் நெருக்கமாக பழகி வந்தார். இந்த பழக்கத்தை ஸ்வப்னா சுரேஷ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தங்க கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

  தற்போது ஜாமீனில் வெளி வந்துள்ள ஸ்வப்னா, சுயசரிதை புத்தகம் ஒன்றை எழுதி அதில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அவர் சிவசங்கருடன் உடனிருக்கும் பர்ஸ்னல் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், நேற்று தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஸ்வப்னா சுரேஷ் முன்னாள் அமைச்சர்கள் கடகம்பள்ளி சேரந்திரன், தாமஸ் ஐசக் மற்றும் முன்னாள் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

  முன்னாள் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் மற்றும் சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் தனியார் விடுதி மற்றும் அரசு இல்லங்களுக்கு தனியாக வரச் சொல்லி நிர்பந்தம் செய்தனர். அவர்கள் பாலியல் அத்துமீறல் தொணியில் பேசியதகாவும் அவர் கூறினார்.

  இதையும் படிங்க: பிரபல ஹோட்டல் அறையில் ரகசிய கேமரா.. தம்பதிகளின் அந்தரங்கத்தை படம்பிடித்து மிரட்டிய 4 பேர் கைது

  அதேபோல், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மறைமுகமான சிக்னல்களை தரும் விதமாக பேசியதாகவும், மூணாறு மிக அழகான இடம் அங்கு தன்னை அழைத்து செல்கிறேன் என்றெல்லாம் அவர் பேசியதாகவும் ஸ்வப்னா புகார் தெரிவித்துள்ளார்.

  வேலை கேட்டு இவர்களிடம் செல்லும் ஏழை பெண்களை தங்களது பாலியல் தேவைக்காக படுக்கைக்கு அழைப்பார்கள் என்றும், தான் உயர்ந்த பதவியில் இருப்பது தெரிந்தும், தன்னையும் படுக்கை அறைக்கு அழைத்ததாகவும் ஸ்வப்னா கூறியுள்ளார்.

  தனக்கே இந்த நிலை என்றால் சாதாரண எளிய பெண்களின் நிலையை சிந்தித்து பார்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

  இந்த சம்பவம் கேரளா அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நெருக்கடியை தந்துள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பாஜக வலியுறுத்தி வருகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Gold, Kerala, Kerala CM Pinarayi Vijayan, Smuggling, Swapna Suresh