10 மாதங்கள்... 150 கிலோ தங்கம்.. கேரள தங்கக்கடத்தல் விசாரணையில் அதிர்ச்சி தகவல்...

கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில், கடந்த 10 மாதங்களாக 150 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

10 மாதங்கள்... 150 கிலோ தங்கம்.. கேரள தங்கக்கடத்தல் விசாரணையில் அதிர்ச்சி தகவல்...
ஸ்வப்னா சுரேஷ்
  • Share this:
கேரள தங்கக்கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை, தேசிய புலனாய்வு முகமையினர் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். என்ஐஏ அமைப்பினர் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய நிலையில், சிறப்பு நீதிமன்றம் 8 நாட்கள் விசாரிக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த கும்பல் தங்கக்கடத்தலில் ஈடுபட்டு வருவதும், 10 மாதங்களாக இதுவரை 150 கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

பல்வேறு அமைப்புகள் மூலம் உள்துறை அமைச்சகம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், கடத்தல் தங்கம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ ஏற்கனவே சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.


ஸ்வப்னா மற்றும் சரித் ஆகியோர் ஐக்கிய அரபு தூதரகத்தில் பணியாற்றி வந்தனர். அங்கு பணியாற்றும் போது தூதரகம் வழியாக ராஜாங்க ரீதியிலான பார்சல்கள் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுவது தெரியவந்துள்ளது. இந்நிலையில் காரணம் தெரிவிக்காமல் அங்கிருந்து பணியில் இருந்து ஸ்வப்னா மற்றும் சரித் ஆகியோர் விலகியுள்ளனர்.

இதையடுத்து சந்தீப் உள்ளிட்டோருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, அவர்கள் 2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் தங்கக்கடத்தலை தொடங்கியுள்ளனர். இதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் போலி முத்திரையை அவர்கள் பயன்படுத்தியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தீப்பிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பையில் இருந்து, இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்த விவரங்களும், ஆதாரங்களும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பையை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் தேசிய புலனாய்வு முகமையினர் திட்டமிட்டுள்ளனர்.இதனிடையே, வருமான வரித்துறை அதிகாரிகளும் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக அரசும் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் துபாயைச் சேர்ந்த ஃபைசல் ஃபரீத் என்பவருக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சர்வதேச காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மூலமாக குற்றவாளி குறித்த தகவல்களை திரட்டுவதற்கான ப்ளூ கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட உள்ளது.

மேலும் படிக்க...

தமிழகத்தில் ஜூலை 31 வரை சிறப்பு ரயில்கள் ரத்து நீட்டிப்பு: தெற்கு ரயில்வே

சேலத்தில் காதலன் வீட்டு முன்பு உயிரைமாய்த்துக்கொண்ட காதலி

இதையடுத்து ஃபைசலை தூதரக நடவடிக்கைகளின் மூலம் கேரளா அழைத்து வந்து விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
First published: July 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading