125 வயதான யோகா குரு சுவாமி சிவானந்தா, பத்மஸ்ரீ விருது வாங்கிய போது, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் மோடியை வணங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மொத்தம் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டது. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. தலைநகர் டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்கினார்.
யோகா குரு சுவாமி சிவானந்தாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதை வழங்கினார். முன்னதாக அரங்கிற்கு வந்த அவர், பிரதமர் மோடி அமர்ந்த இடத்துக்கு சென்று தரையில் விழுந்து வணங்கினார். அவருக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி அவரை குனிந்து வணங்கினார். இதனைதொடர்ந்து, ராம்நாத் கோவிந்தை தரையில் விழுந்து வணங்கியபோது, அவரை உடனடியாக எழுப்பி பத்மஸ்ரீ விருதை வழங்கி குடியரசுத் தலைவர் கவுரவித்தார்.
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.