Home /News /national /

தூய்மை இந்தியா திட்டத்துக்கு யுனிசெஃப் ஒப்புதல்!

தூய்மை இந்தியா திட்டத்துக்கு யுனிசெஃப் ஒப்புதல்!

கோப்புப்படம்

கோப்புப்படம்

திறந்தநிலைக் கழிவறை முறையை ஒழித்ததால் நிலத்தடி நீர் மட்டும் கெடாமல் காக்க முடிந்ததாகக் கூறப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தால் நிலத்தடி நீர் கெடாமல் காக்கப்பட்டிருப்பதாக யுனிசெஃப் ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஏற்பட்ட சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்து யுனிசெஃப் உடன் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து ஜல் சக்தி அமைச்சகத்தின் அமைச்சர் கஜேந்திர சிங் கூறுகையில், “2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆய்வில், இந்தியா திறந்தநிலை கழிவறைப் பழக்கத்தை விட்டொழித்து சுமார் 3 லட்சம் உயிரினங்களைக் காப்பாற்றியதாகக் கூறப்பட்டது” என்றார்.

உலக சுற்றுச்சூழல் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டதை அடுத்து இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. திறந்தநிலைக் கழிவறை முறையை ஒழித்ததால் நிலத்தடி நீர் மட்டும் கெடாமல் காக்க முடிந்ததாகக் கூறப்படுகிறது. தூய்மை இந்தியா திட்டம் மூலம் திறந்தநிலை கழிப்பிட முறை இந்தியாவில் ஒழிக்கப்பட்டதாகவே யுனிசெஃப் கூறுகிறது.

மேலும் பார்க்க: ’டெலிவரி பசங்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுங்க!’- ஜொமேட்டோ கோரிக்கை
Published by:Rahini M
First published:

Tags: Clean india, UNICEF

அடுத்த செய்தி