முகப்பு /செய்தி /இந்தியா / மம்தாவை வீழ்த்திய சுவேந்து அதிகாரி மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு! - ஒரு குட்டி பிளாஷ்பேக்..

மம்தாவை வீழ்த்திய சுவேந்து அதிகாரி மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு! - ஒரு குட்டி பிளாஷ்பேக்..

எதிர்க்கட்சித் தலைவரானார் சுவேந்து அதிகாரி

எதிர்க்கட்சித் தலைவரானார் சுவேந்து அதிகாரி

2007-ல் நடைபெற்ற நந்திகிராம் நில எதிர்ப்பு போராட்டம் மேற்குவங்க அரசியல் சூழலை திரிணாமுல் காங்கிரஸுக்கு ஆதரவாக மாற்றியமைத்தது. அந்த போராட்டத்தின் மூலம் திரிணாமுல் காங்கிரஸின் முன்னணித் தலைவராக சுவேந்து அதிகாரி மாறினார்.

  • 1-MIN READ
  • Last Updated :

மேற்குவங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் வென்று 3வது முறையாக ஆட்சியமைத்திருக்கிறார் மம்தா பானர்ஜி. 2016 தேர்தலில் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக இந்த முறை அசுர வளர்ச்சி அடைந்து 77 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றிருக்கிறது. இந்த வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தவர் முன்னாள் அமைச்சரும், மம்தாவின் வலதுகரமாகவும் திகழ்ந்த சுவேந்து அதிகாரி.

கடந்த டிசம்பரில் பாஜகவுக்கு தாவிய சுவேந்து அதிகாரி, சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து போட்டியிட்டதுடன் தான் வெற்றி பெறுவேன் என சவாலும் விடுத்தார். இருப்பினும் அவர் விட்ட சவாலில் அவர் ஜெயித்தார். நந்திகிராம் தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது முன்னணி நிலவரம் மாறி மாறி வந்த நிலையில் கடைசியில் சுமார் 2000 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியை அவர் தோற்கடித்தார். பாஜக ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும் கூட சுவேந்து அதிகாரியின் வெற்றி மம்தாவை அசைத்துப்பார்த்தது.

இந்த நிலையில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்ற சுவேந்து அதிகாரி மேற்குவங்க எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த சுவேந்து அதிகாரி?

ஆரம்ப நாட்களில் ஆர்.எஸ்.எஸ் ஷாக்காக்களில் பயிற்சி பெற்ற சுவேந்து அதிகாரி, 1980களின் இறுதிக்கட்டத்தில் அவருடைய பள்ளி நாட்களில் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான சத்ர பரிஷத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

இவர் 1995ம் ஆண்டு கந்தி நகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்வானார். 1967 முதல் 2009 வரை சுவேந்து அதிகாரியின் தந்தை தான் கந்தி நகராட்சியின் சேர்மனாக இருந்தார்.

1996 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நிதிஷ் சென்குப்தாவின் தேர்தல் ஏஜெண்டாக செயல்பட்டார். 3 ஆண்டுகள் கழித்து சுவேந்து அதிகாரியும், அவரது தந்தையும் காங்கிரஸில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வயது தான் ஆகியிருந்தது.

இதன் பின்னர் 2001 சட்டமன்ற தேர்தலிலும், 2004 பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி தோல்வியை தழுவினார். 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கந்தி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மேலும் படிக்க:  ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 2 கொரோனா சிகிச்சை மையம்: 48 மணி நேரத்தில் கட்டமைக்கப்பட்டு அசத்தல்!

2007-ல் நடைபெற்ற நந்திகிராம் நில எதிர்ப்பு போராட்டம் மேற்குவங்க அரசியல் சூழலை திரிணாமுல் காங்கிரஸுக்கு ஆதரவாக மாற்றியமைத்தது. அந்த போராட்டத்தின் மூலம் திரிணாமுல் காங்கிரஸின் முன்னணித் தலைவராக சுவேந்து அதிகாரி மாறினார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக சுவேந்து நியமிக்கப்பட்ட்டார். 2009 மற்றும் 2014 பாராளுமன்ற தேர்தல்களில் தம்ளுக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011ம் ஆண்டு மம்தா மாநிலத்தை ஆட்சியை கைப்பற்றிய நிலையில் பலரும் சுவேந்து அதிகாரியை மம்தாவுக்கு அடுத்த தலைவராக பார்த்தனர். இருப்பினும் ஜூலை 21 2011-ல் மம்தா பானர்ஜி தனது உறவினரான அபிஷேக் பானர்ஜியை கட்சிக்குள் கொண்டு வந்த போது சுவேந்துவிற்கு அது சங்கடத்தை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க:  டெல்லியில் விவசாயிகள் போராட்டக் களத்தில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண் செயற்பாட்டாளர்!

அபிஷேக் அவருடைய 24வது வயதில் திரிணாமுல் காங்கிரஸின் மற்றொரு மாணவர் அமைப்பான யுவாவின் தலைவராக ஆக்கப்பட்டார். இது இளைஞர் அணியின் சமனான பிரிவாகும். 2014ல் சுவேந்து அதிகாரி இளைஞர் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு பின்னர் யுவா பிரிவு திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் அணியுடன் இணைக்கப்பட்டது.

சுவேந்து அதிகாரி கட்சியில் இருந்து விலகலாம் என பேச்சு எழுந்த போது 2016ல் சுவேந்துவை நந்திகிராமில் வேட்பாளராக்கினார் மம்தா. இதில் வெற்றி பெற்ற போது அவருக்கு அமைச்சர் பதவியும் முக்கியமான 3 இலாக்காக்களும் கொடுக்கப்பட்டது. இருப்பினும் கட்சிக்குள் அபிஷேக்கின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தது. இது தன்னை ஓரங்கட்டும் செயல் என உணர்ந்த சுவேந்து அதிகாரி கடந்த ஆண்டு டிசம்பரில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

First published:

Tags: BJP, Mamata banerjee, West Bengal Assembly Election 2021