முகப்பு /செய்தி /இந்தியா / பொறியியல் படிக்க கணிதம், இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை என்ற உத்தரவு நிறுத்திவைப்பு

பொறியியல் படிக்க கணிதம், இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை என்ற உத்தரவு நிறுத்திவைப்பு

கோப்பு படம்

கோப்பு படம்

2021-2022ம் கல்வியாண்டு முதல் கணிதம், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களை விருப்பப் பாடமாக எடுத்து படிக்காதவர்களும் பொறியியல் படிப்பில் சேரலாம் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பொறியியல் படிப்பில் சேருவதற்கு கணிதம், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்கள் கட்டாயமில்லை என்கிற உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது.

2021-2022ம் கல்வியாண்டு முதல் கணிதம், வேதியியல் மற்றும் இயற்பியல் பாடங்களை விருப்பப் பாடமாக எடுத்து படிக்காதவர்களும் பொறியியல் படிப்பில் சேரலாம் என்கிற அறிவிப்பு  வெளியானது. அதன்படி, பொறியியல் படிப்பில் சேருவதற்கான புதிய நடைமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் புதிதாக நேற்று வெளியிட்டது.

அத்துடன், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களை 12ஆம் வகுப்பில் பயிலாதவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்த பிறகு இந்தப் பாடங்களை அவர்கள் இணைப்பு பாடமாக தேர்வு செய்து படிக்க வேண்டும் என்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பிற்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த பாடங்களை மாணவர்கள் கட்டாயம் படித்திருந்தால் மட்டுமே அவர்கள் பொறியியல் பட்டப்படிப்பில் முழுமை பெற முடியும் என்ற கருத்தும் பரவலாக எழுந்தது. இந்நிலையில், புதிய நடைமுறையை நிறுத்திவைத்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Must Read : நீட் தேர்வு ஆண்டுக்கு இருமுறையா, ஒருமுறையா? : தேசிய தேர்வு முகமையின் அறிவிப்பு

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய பாடங்களை பயிலாதவர்களும் பொறியியல் படிப்பினை தேர்வு செய்து படிக்கலாம் என்கிற அடிப்படையில் புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Education, Engineering, Engineering student