8 எம்.பி.க்கள் இடைநீக்கம்: கூட்டத்தொடரை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து மாநிலங்களவை எம்பிக்கள் 8 பேரும் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தி வந்த போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர். ஆனால் கோரிக்கைகளை ஏற்கும் வரை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

8 எம்.பி.க்கள் இடைநீக்கம்: கூட்டத்தொடரை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்
மாநிலங்களவை (கோப்புப்படம்)
  • News18 Tamil
  • Last Updated: September 22, 2020, 8:43 PM IST
  • Share this:
மாநிலங்களவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபோது, அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் 8 பேரை இடைநீக்கம் செய்வதாக மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்யா நாயுடு அறிவித்தார். அதேநேரத்தில், மசோதா நிறைவேற்றப்பட்ட விதத்தைக் கண்டித்து துணைத் தலைவர் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் நிராகரித்தார். இதனை ஏற்க மறுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அவைக்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வெளியேற வேண்டும் என அவைத்தலைவர் உத்தரவிட்டதை அடுத்து, அவையை விட்டு வெளியேறிய அவர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தைத் தொடங்கினர். அப்போது தேசபக்தி பாடல்களை பாடி விவசாயிகளுக்கு ஆதரவாக முழக்கங்களையும் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்களுக்கு முன்னாள் பிரதமர் தேவகவுடா, காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா, தமிழக எம்.பி.க்கள் திருச்சி சிவா, சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் நேரில் ஆதரவு தெரிவித்தனர். இரவிலும் நீடித்த போராட்டம் 2வது நாளாக தொடர்ந்தது. அப்போது மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நேரில் சென்று வழங்கிய தேநீரை பெற எம்பிக்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து கடந்த 2 நாட்களாக தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக 24 மணிநேர உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தார்.

இதனிடையே, வேளாண் மசோதா நிறைவேற்றப்பட்டபோது நிகழ்ந்தவை குறித்த மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டது.  அப்போது பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட முறை ஏற்கத்தக்கதல்ல என்றார்.


Also read: சென்னையில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் வேலைக்கான காலி பணியிடங்கள் அறிவிப்புஇடைநீக்க நடவடிக்கையை திரும்பப்பெற வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை அவைத்தலைவர் வெங்கய்யா நாயுடு நிராகரித்தார். இதையடுத்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் மாநிலங்களவை நடவடிக்கைகளைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில், கூட்டத்தொடரைப் புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகளின் முடிவை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சஸ்பெண்ட் ஆன எம்பிக்கள் அறிவித்தனர். இதையடுத்து, வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்திருத்த மசோதா, கம்பெனிகள் சட்டத்திருத்த மசோதா, அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திருத்த மசோதா ஆகியவை எதிர்க்கட்சிகள் இன்றி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading