முகப்பு /செய்தி /இந்தியா / எம்பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோரின் இடைநீக்கம் உத்தரவு ரத்து

எம்பிக்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் ஆகியோரின் இடைநீக்கம் உத்தரவு ரத்து

4 எம்பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

4 எம்பிக்கள் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, மாணிக் தாகூர், ரம்யா ஹாரீஸ் மற்றும் டி.என்.பிரதாபன் உள்ளிட்ட 4 எம்.பிக்களை மழைகால கூட்டத்தொடர் முடியும் வரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டிருந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டதாக மக்களவை எம்பிக்கள் 4 பேர், மாநிலங்களவை எம்பிக்கள் 20 பேர் என மொத்தம் 24 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஒரு கூட்டத்தொடரில் இத்தனை எம்பிக்கள் சஸ்பெண்ட் ஆனது இதுவே முதல்முறை எனலாம்.

இந்த கூட்டத்தொடரில் விலைவாசி உயர்வு தான் மையப் பிரச்னையாக இருந்து வந்த நிலையில், கடந்த 26ஆம் தேதி அன்று மக்களவை சபாநாயகரை சூழ்ந்து கொண்டு உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட விவகாரங்களை முன்னிறுத்தி காங்கிரஸ் எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். விலை உயர்வு குறித்த பதாகைகளையும் கையில் ஏந்தி இருந்தனர். அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிகளை இருக்கையில் அமருமாறு சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். ஆனால் சபாநாயகர் எச்சரிக்கை விடுத்த பின்னரும் உறுப்பினர்கள் அமளியை நிறுத்தவில்லை.

இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, மாணிக் தாகூர், ரம்யா ஹாரீஸ் மற்றும் டி.என்.பிரதாபன் உள்ளிட்ட 4 எம்.பிக்களை மழைகால கூட்டத்தொடர் முடியும் வரை இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். உறுப்பினர்கள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்பப்பெறப்படும் என சபாநாயகர் கூறிய நிலையில், இந்த சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என ஜோதிமணி தெரிவித்தார்.

மேலும், தங்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்து சஸ்பெண்டான எம்பிக்கள் 50 மணி நேரம் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சிக்கன் நல்லா இல்லை என மனைவிக்கு கத்திக்குத்து.. பயத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவர்

இந்நிலையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் எம்.பி ஜோதிமணி, மாணிக் தாகூர், ரம்யா ஹாரீஸ் மற்றும் டி.என்.பிரதாபன் ஆகிய 4 பேரின் இடைநீக்க உத்தரவை சபாநாயகர் திரும்பப்பெற்றுள்ளார். இதையடுத்து இந்த கூட்டத்தொடரில் மேற்கண்ட நான்கு பேரும் இனி வழக்கம் போல பங்கேற்கலாம். அதேவளை, அவைக்குள் உறுப்பினர்கள் பதாகைகளை கொண்டு வரக் கூடாது என சபாநாயகர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Congress, Jothimani, Parliament