ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து விபத்து.. 400 பேர் காயம்.. 100 பேரின் கதி என்ன?

குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து விபத்து.. 400 பேர் காயம்.. 100 பேரின் கதி என்ன?

இடிந்து விழுந்த கேபிள் பாலம்

இடிந்து விழுந்த கேபிள் பாலம்

இந்த விபத்தில் ஏற்பட்டபோது பாலத்தில் 500க்கும் மேற்பட்டோர் இருந்தனர் என்றும் 100 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Gujarat, India

   குஜராத்தின் மோர்பி பகுதியில் உள்ள மச்சு ஆற்றில் கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

  குஜராத் மாநிலம், மோர்ஹி பகுதியில் மச்சு ஆறு ஓடிக் கொண்டிக்கிறது. இந்த ஆற்றை கடக்க அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்காணக்கனோர் பொதுமக்கள் அங்குள்ள கேபிள் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம்போல் இன்று மாலையும் நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.

  இந்த விபத்தால் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்த பலரின் நிலை குறித்து தெரியாததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாலத்தின் இடிபாடுகளில் பலர் விழுந்துள்ளதால் பலரும் படுகாயமடைந்து இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர் விபத்தில் சிக்கி ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

  இதையும் படிங்க: சாலை பள்ளத்தால் பறிபோன 22 வயது இளைஞரின் உயிர்: தொடரும் சோகம்

  மீட்புப் பணிகளுக்காகக் குழுக்களை அவசரமாகத் திரட்டுமாறு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்க குஜராத் மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விபத்தில் உயிரிழப்பு உள்ளிட்ட எந்த ஒரு தகவலும் வெளியாகிவில்லை

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Gujarat