முகப்பு /செய்தி /இந்தியா / 50 மணி நேரம் தொடர் தர்ணா..சஸ்பெண்ட் ஆன 24 எதிர்க்கட்சி எம்பிக்கள் காந்தி சிலை முன் போராட்டம்

50 மணி நேரம் தொடர் தர்ணா..சஸ்பெண்ட் ஆன 24 எதிர்க்கட்சி எம்பிக்கள் காந்தி சிலை முன் போராட்டம்

காந்தி சிலை முன் எம்பிக்கள் தர்ணா

காந்தி சிலை முன் எம்பிக்கள் தர்ணா

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் 24 பேர் 50 மணிநேரம் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடைபெற வேண்டும் என மாநிலங்களவையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ள எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவை தலைவர் நாற்காலி முன்னர் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட சுமார் 20 எம்.பி-க்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மாநிலங்களை தலைவர் உத்தரவிட்டார். இதில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் ஏழு பேர், திமுக எம்பிக்கள் ஆறு பேர் ஆகியோர் அடக்கம். அதேபோல், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, சிபிஐ, சிபிஎம், ஆம்ஆத்மி ஆகிய கட்சி உறுப்பினர்களும் சஸ்பெண்ட் ஆகியுள்ளனர்.

அதேபோல், விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மக்களவையில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பிக்கள் ஜோதிமணி, மாணிக் தாகூர், ரம்யா ஹாரீஸ் மற்றும் டி.என்.பிரதாபன் உள்ளிட்ட 4 எம்.பிக்களை மழைகால கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட 24 எம்.பி.க்களும் தங்கள் மீதான நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலை அருகே இந்த தர்ணா போராட்டமானது 50 மணிநேரத்திற்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சர்வாதிகாரிகள் போல செயல்படுவதாக பதாகைகளை ஏந்தி எம்பிக்கள் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், போராட்டத்தில் ஈடுபடும் எம்பிகளுக்கு காலை உணவை திமுக மாநிலங்களை உறுப்பினர் திருச்சி சிவா ஏற்பாடு செய்து வழங்கி வருகிறார். அதேபோல, தெலாங்கானா ராஷ்டிரிய சமிதி, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் மத்திய உணவு, இரவு உணவு ஆகியவற்றுக்கு மாறி மாறி ஏற்பாடு செய்து வழங்கி வருகின்றன.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இது தொடர்பாக, இடைநீக்கம் போன்ற அச்சுறுத்தலுக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். மக்களை பாதிக்கின்ற விலைவாசி உயர்வை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம், போராடிக்கொண்டேதான் இருப்போம் என்றுள்ளார்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் பாஜக தொண்டரை வெட்டிக் கொன்ற மர்மகும்பல்.. தட்சிண கன்னடாவில் பதற்றம்

இந்நிலையில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்கள் மன்னிப்பு கேட்டு இனி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடாமல் இருந்தால், சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்ப பெறப்படும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். ஆனால், மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என எதிர்க்கட்சி எம்பிக்கள் திட்டவட்டமாக உள்ளனர்.

First published:

Tags: Jothimani, Lok sabha, Rajya sabha MP, Trichy Siva