சுஷ்மா ஸ்வராஜ்: நவயுக இந்திய அமைச்சரின் மறக்க இயலா சாதனைகள்!

24 மணி நேரமும் உலகின் எந்த மூலையிலிருந்து உதவி என ஆன்லைனில் கேட்டாலே போதும், அதற்கு உடனடியாகப் பதிலும் அளித்து நடவடிக்கையும் எடுத்திருப்பார் சுஷ்மா.

Web Desk | news18
Updated: August 7, 2019, 6:36 PM IST
சுஷ்மா ஸ்வராஜ்: நவயுக இந்திய அமைச்சரின் மறக்க இயலா சாதனைகள்!
சுஷ்மா ஸ்வராஜ் (கோப்புப்படம்)
Web Desk | news18
Updated: August 7, 2019, 6:36 PM IST
இந்திய அமைச்சரவையிலேயே புதிய தொழில்நுட்பங்களை சாதகங்களுக்காகப் பயன்படுத்தி ‘நவயுக’ இந்திய அமைச்சர் என்று வெளிநாட்டு ஊடகங்களே வர்ணிக்கும் அளவில் புகழ்பெற்றவர் மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

24 மணி நேரமும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ந்து செயல்பட்டு வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு மட்டுமல்லாது வெளிநாட்டவருக்கும் உதவி புரிந்தவர் சுஷ்மா. ‘சூப்பர்மாம்’ என்ற அடைமொழியோடு ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையால் பாராட்டப் பெற்றவர். 2019 மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்பதை அறிவித்தவருக்கு ட்விட்டர்வாசிகள் வெளிப்படுத்திய உணர்ச்சிகள் சுஷ்மாவை நிச்சயம் திக்குமுக்காடச் செய்திருக்கும்.

நாட்டுக்கும் நாட்டு மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளை இன்றைய நவீன தொழில்நுட்பங்களால் சாத்தியப்படுத்திய சுஷ்மாவின் செயல்திறனை சர்வதேச ஊடகங்கள், ‘டிஜிட்டல் ராஜதந்திரி’ என்றே பாராட்டுகின்றனர். 2014-ம் ஆண்டு மோடி அரசின்கீழ் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதிவியேற்றார் சுஷ்மா. அன்றிலிருந்து தொடர்ந்து 24 மணி நேரமும் உலகின் எந்த மூலையிலிருந்து உதவி என ஆன்லைனில் கேட்டாலே போதும், அதற்கு உடனடியாகப் பதிலும் அளித்து நடவடிக்கையும் எடுத்திருப்பார் சுஷ்மா.


கடந்த 2017-ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு இருதய அறுவை சிகிச்சைக்காக ஓராண்டு மருத்துவ விசா வழங்கி உதவினார். ட்விட்டர் மூலமாகவே உதவி கேட்ட மேலும் இரண்டு பாகிஸ்தானியருக்கு மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவில் வந்து தங்க ஓராண்டு மருத்துவ விசா அளித்து உதவினார். இதேபோல் 2015-ம் ஆண்டு இந்தியர் ஒருவரை மணந்து குழந்தையுடன் ஏமனில் தவித்த ஏமன் பெண் ஒருவருக்கு சமூக வலைதளம் மூலமாகவே அறிந்து உதவி செய்தார் சுஷ்மா.

அரசியல், நாடு பேதங்கள் கடந்து பலதரப்பு மக்களிடமிருந்தும் தனது சேவைகளுக்காகத் தொடர்ந்து பாராட்டப்பட்டுள்ளார் சுஷ்மா. ஜெர்மனியின் பெர்லின் நகரில் இந்திய மாணவி ஒருவர் தனது பணம், பாஸ்போர்ட் கொண்ட பர்ஸ் தொலைந்துவிட்டதாக ட்விட்டர் மூலம் தெரிவித்ததற்கு உடனடியாக அம்மாணவிக்கு உதவியுள்ளார். ஈரானில் கடந்த 2015-ம் ஆண்டில் சிக்கிக்கொண்டு தவித்த 168 இந்தியர்களை பாதுகாப்பாக நாடு திரும்பச் செய்தது வெகுவான பாராட்டைப் பெற்றது.

தனது பதவியால் சேவை மனப்பான்மையுடன் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பலரது வாழ்வினையும் காப்பற்றத் துணை புரிந்தவர் சுஷ்மா ஸ்வராஜ் என அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்குப் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...