மாநில அரசு மரியாதையுடன் சுஷ்மா சுவராஜ் உடல் தகனம்! மோடி, எல்.கே. அத்வானி பங்கேற்பு

மருத்துவமனையிலிருந்து அவரது உடல் நள்ளிரவில், ஜன்தர் மந்தர் பகுதியில் உள்ள சுஷ்மா சுவராஜின் இல்லத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது.

news18
Updated: August 7, 2019, 5:30 PM IST
மாநில அரசு மரியாதையுடன் சுஷ்மா சுவராஜ் உடல் தகனம்! மோடி, எல்.கே. அத்வானி பங்கேற்பு
சுஸ்மா சுவராஜ்
news18
Updated: August 7, 2019, 5:30 PM IST
பா.ஜ.க மூத்த தலைவர் மறைந்த சுஷ்மா சுவராஜின் உடல் டெல்லியிலுள்ள லோதி சாலை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சுஷ்மா ஸ்வராஜ், நேற்று இரவு திடீரென டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிக மோசமடைந்ததாக நிலையில் சிறிது நேரத்தில் சுஷ்மா ஸ்வராஜ் உயிரிழந்தார். மருத்துவமனையிலிருந்து அவரது உடல் நள்ளிரவில், ஜன்தர் மந்தர் பகுதியில் உள்ள சுஷ்மா சுவராஜின் இல்லத்திற்கு அவரது உடல் கொண்டுவரப்பட்டது.

சுஸ்மா சுவராஜ் இறுதிச் சடங்கில்பின்னர், இன்று காலை 11 மணிக்கு பா.ஜ.க தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர், அங்கிருந்து ஊர்வலமாக லோதி சாலையிலுள்ள மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இறுதிச் சடங்கில் குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, பூடான் நாட்டின் மூன்னாள் பிரதமர் ஷெரிங் டோப்கே, மூத்த பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுஸ்மா சுவராஜின் மகள் பன்சுரி சுவராஜ் இறுதி மரியாதை செய்தார். அதன்பின்னர், மாநில அரசு மரியாதையுடன் சுஸ்மா சுவராஜின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Also see:

Loading...

 
First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...