• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • சுஸ்மா சுவராஜ், அருண் ஜெட்லி இல்லாத மத்திய அமைச்சரவை! மாறும் பா.ஜ.க முகம்

சுஸ்மா சுவராஜ், அருண் ஜெட்லி இல்லாத மத்திய அமைச்சரவை! மாறும் பா.ஜ.க முகம்

அருண் ஜெட்லி, சுஸ்மா சுவராஜ்

அருண் ஜெட்லி, சுஸ்மா சுவராஜ்

அதற்கு முன்னதான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பா.ஜ.க மக்களவை எதிர் கட்சித் தலைவராக சுஸ்மா சுவராஜும், மாநிலங்களவை எதிர் கட்சித் தலைவராக அருண் ஜெட்லியும் பதவிவகித்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    மோடி தலைமையில் பா.ஜ.க மூத்த தலைவர்கள் சுஸ்மா சுவராஜ், அருண் ஜெட்லி இல்லாத அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

    நாடு முழுவதும் வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க மிகப்பெரும் வெற்றியைப் பிடித்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கிறது. இன்று நடைபெற்ற பதவியேற்பு இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார். அதனைத்தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    மேலும், 20-க்கும் மேற்பட்டவர்கள் இணை அமைச்சர்களாக பதவியேற்றனர். முன்னதாக, 2014-ம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றபோது, அந்த அமைச்சரவையில் மத்திய நிதியமைச்சராக அருண் ஜெட்லியும், வெளியுறவுத் துறை அமைச்சராக சுஸ்மா சுவராஜும் பதவிவகித்தனர். அதற்கு முன்னதான காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பா.ஜ.க மக்களவை எதிர் கட்சித் தலைவராக சுஸ்மா சுவராஜும், மாநிலங்களவை எதிர் கட்சித் தலைவராக அருண் ஜெட்லியும் பதவிவகித்தனர்.

    இருவரும் பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள். சுஸ்மா சுவராஜ், அருண் ஜெட்லி இருவரும் நீண்ட காலமாக பா.ஜ.கவின் சார்பில் எம்.பியாக இருந்தவர்கள். அருண் ஜெட்லி தற்போது மாநிலங்களவை எம்.பியாக இருக்கிறார். சுஸ்மா சுவராஜ் இந்தமுறை மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இருவரும் உடல்நலக் குறைபாட்டின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: