வழக்கறிஞர் முதல் மத்திய அமைச்சர் வரை.. சுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாறு

News18 Tamil
Updated: August 7, 2019, 6:59 AM IST
வழக்கறிஞர் முதல் மத்திய அமைச்சர் வரை.. சுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாறு
News18 Tamil
Updated: August 7, 2019, 6:59 AM IST
மத்திய முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான சுஷ்மா சுவராஜ், மாரடைப்பு ஏற்பட்டு, நேற்று இரவு பத்து மணியளவில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இரவு 11 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். 67 வயதாகும் அவருக்கு சுவராஜ் கவுசல் என்ற கணவரும், பன்சூரி என்ற மகளும் உள்ளனர்.

1953-ம் ஆண்டு ஹரியானாவில் பிறந்த சுஷ்மா சுவராஜ்,  சட்டப்படிப்பை நிறைவுசெய்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.  தமது 25வது வயதில், மாநில அமைச்சராக பொறுப்பேற்ற அவர், இளம் வயதிலேயே அமைச்சரான பெருமைக்கு சொந்தக்காரரானார்.


1998-ம் ஆண்டு டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக பொறுப்பேற்று பணியாற்றியவர் சுஷ்மா, ஏழு முறை மக்களவை எம்.பி.யாக இருந்த அவர், பிரதமர் மோடியின் கடந்த அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

இந்திரா காந்திக்கு பிறகு 2வது பெண் வெளியுறவு அமைச்சராக இருந்தவர் சுஷ்மா. பாஜகவில் இருந்துவந்த முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையும் மக்களவையில் முதல் பெண் எதிர்கட்சித் தலைவர் என்ற பெருமையும் இவருக்கும் உண்டு.

இதனிடையே 2016-ம் ஆண்டு, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மேற்கொண்ட அவர், இந்தாண்டு மக்களவைத் தேர்தலில், உடல்நலக்குறைவு காரணமாக போட்டியிடவில்லை.
First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...