காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர்! காரியக் கமிட்டியின் தேர்வு வரிசையில் இருப்பவர்கள் யார் யார்?

இந்த மக்களவைத் தேர்தலில் 11 தொகுதிகளில், இந்த இரு கட்சிகளின் கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை, பா.ஜ.கவிடம் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் தோல்வியடைந்த வாக்குகளின் எண்ணிக்கையை விட அதிகம்.

news18
Updated: July 4, 2019, 8:54 PM IST
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர்! காரியக் கமிட்டியின் தேர்வு வரிசையில் இருப்பவர்கள் யார் யார்?
காங்கிரஸ்
news18
Updated: July 4, 2019, 8:54 PM IST
ராகுல் காந்திக்கு பதிலாக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு, மூத்த தலைவர்கள் சுஷில் குமார் ஷிண்டே, முகுல் வாஸ்னிக், மல்லிகார்ஜூன் கார்கே ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறவித்தார். அவருடைய முடிவுக்கு, காங்கிரஸ் காரியக் கமிட்டி ஒப்புதல் அளிக்காமல் இருந்துவந்தது. இருப்பினும், அவரது முடிவில் பிடிவாதமாக இருந்துவந்தார்.

சுஷில் குமார் ஷிண்டே


நேற்று, ராஜீனாமா கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சி விதிமுறைகளின்படி, காங்கிரஸ் தலைவர் பதவி விலகினால், அக்கட்சியின் காரியக் கமிட்டி, தலைவரை முடிவு செய்யும்வரையில், அக்கட்சியின் பொதுச் செயலாளரில் மூத்த தலைவர் இடைக்காலத் தலைவராக நியமிக்கப்படுவார்.

அதன்படி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் மூத்தவரான மோதிலால் வோரா, இடைக்காலத் தலைவராக செயல்படுவார் என்று தெரிகிறது. தற்போது, காங்கிரஸ் காரியக் கமிட்டி யாரைத் தலைவராக தேர்ந்தெடுக்கவுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, கட்சித் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் பரவுகின்றன. 70-வயதைக் கடந்துள்ள சுஷில் குமார், இந்தமுறை மக்களவைத் தேர்தலில் ஷோலாபூர் தொகுதியில் போட்டியிட்டு, பா.ஜ.க வேட்பாளர் ஜெய் சித்தேஸ்வர் சிவாச்சார்யா சுவாமியிடம் தோல்வியடைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலித் அடையாளமாக இருந்துவருகிறது. காந்தி குடும்பத்திடம், மிகப் பெரும் மரியாதையைப் பெற்றவர் சுஷில் குமார் ஷிண்டே.

முகுல் வாஸ்னிக்


அடுத்ததாக, முகுல் வாஸ்னிக்கின் பெயரும் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடிபடுகிறது. அவரும், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலித் அடையாளமாக உள்ளார். மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தின்போது, மத்திய அமைச்சராக இருந்தார்.

இந்த ஆண்டின் இறுதியில் மஹாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநிலத்தில் இருந்து, காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் நியமிக்கப்படும் நிலையில், மாநிலத்தில் அக்கட்சி வலுப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரகாஷ் அம்பேத்கரின், இந்திய குடியரசுக் கட்சியும், அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிகள், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸின் வாக்குகளை பெருமளவில் பிரித்துள்ளன.

மல்லிகார்ஜூன் கார்கே


இந்த மக்களவைத் தேர்தலில் 11 தொகுதிகளில், இந்த இரு கட்சிகளின் கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை, பா.ஜ.கவிடம் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் தோல்வியடைந்த வாக்குகளின் எண்ணிக்கையை விட அதிகம்.

கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கேவும் அக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது. அவரும், கர்நாடக அரசியிலில் முக்கிய தலித் அடையாளமாகப் பார்க்கப்படுகிறார்.

Also see:

First published: July 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...