’எல்லாவற்றிலும் தோல்வி’ -  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரூ.5 கோடி வென்றவரின் உருக்கமான பதிவு

’எல்லாவற்றிலும் தோல்வி’ -  தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ரூ.5 கோடி வென்றவரின் உருக்கமான பதிவு

சுஷில் குமார்

தனியார் டிவி நிகழ்ச்சியில் ரூ.5 கோடியை பரிசுத் தொகை வென்ற பீகாரைச் சேர்ந்த சுஷில் குமார், அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த துயரமான சம்பவங்களை பகிர்ந்தது முக்கியச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

 • Share this:
  பிரபல தனியார் தொலைக்காட்சி வினாடி வினா நிகழ்ச்சியான 'கவுன் பனேகா குரோர்பதி'யின் ஐந்தாவது சீசனில், பீகாரை சேர்ந்த சுஷில் குமார் என்ற நபர் ரூ.5 கோடியை பரிசுத் தொகையாக வென்றுள்ளார். பலருக்கு இது உலகின் மிகச் சிறந்த விஷயமாக இருக்கும். ஆனால் அது குமாருக்கு அப்படி அல்ல. சமீபத்திய பேஸ்புக் பதிவில், அவர் மிகப்பெரிய தொகையை வென்ற பிறகு தற்போது தனது வாழ்க்கையின் மிக மோசமான கட்டத்தை கடந்துவிட்டதாக ஒப்புக் கொண்டார்.

  கவுன் பனேகா குரோர்பதியின் வெற்றி அவரை உடனடி புகழ் பெற வைத்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரால் அதை நன்றாக கையாள முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். அவர் வென்ற பணத்தால், சில வணிகங்களை தொடங்க பல முறை முயன்றார். ஆனால் முயற்சி எப்போதும் இழப்பையே ஏற்படுத்தியது. அதன்பின்பு, அவர் டெல்லிக்கு சென்று வணிகம் செய்ய முயற்சித்துள்ளார், பின்னர் மும்பைக்கு  சென்றுள்ளார். ஆனால் எங்கு அவருக்கு சரியாக தொழில் அமையவில்லை.

  தெரியாத ஒன்றைத் தேடிய அவரால், தனக்கு வேண்டிய மன அமைதியை பெற முடியவில்லை. இதனால் அவரது மனைவியுடனான அவரது உறவும் சரியாகஇல்லை. ஒரு பதிவில், சுஷில் குமார், “ 2015 - 2016ம் ஆண்டு எனது வாழ்க்கையின் மிகவும் சவாலான காலம். உள்ளூர் பிரபலமாக இருப்பதால் என்னால் படிப்பை சரியாக தொடர முடியவில்லை, பீகாரில் ஒவ்வொரு மாதமும் 10 முதல் 15 நிகழ்வுகளில் கலந்துகொண்டேன் ” என்று பதிவிட்டுள்ளார்.

  ஊடகங்களில் சித்தரிக்கப்படுவதை உணர்ந்த அவர் தான் வேலையில்லாத நபராக வர விரும்பாததால், மிகவும் வேதனை அடைந்ததாக உணர்ந்தேன் என்று கூறினார். அவரது சில வணிக முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர், அந்தந்த காரணங்களுக்காக பணத்தை நன்கொடையாக வழங்க தொடங்கினார். இது சில "தவறான வகை மக்களை" ஈர்த்தது. ஆகையால் பீகாரில் நம்பிக்கையை இழந்த அவர் டெல்லிக்கு சென்றார். அங்கு ஒரு நண்பருடன் கால் டாக்ஸி ஓட்ட தொடங்கினார். டெல்லியில் அவர் ஜே.என்.யூ, ஐ.ஐ.எம்.சி மற்றும் பிற கலைஞர்களை சேர்ந்த மாணவர்களை சந்தித்தார்.

  அந்த சந்திப்பானது அவர் புரிந்துகொண்டதை விட வாழ்க்கையில் இன்னும் நிறைய இருக்கிறது என்பதை உணர்த்தியது என்று அவர் கூறியுள்ளார். டெல்லியில் இருந்த காலத்தில், அவர் சிகரெட் மற்றும் மதுவுக்கு அடிமையாகிவிட்டார். இதன் தாக்கமாக  மனைவியுடனான அவரது உறவு மோசமடைந்தது, ஒரு கட்டத்தில் அவர் விவாகரத்து கூட கேட்டார். அதன் பின்னர் அவர் படங்களில் தனது அதிர்ஷ்டத்தை முயற்சிக்க மும்பைக்கு சென்றார். அதுவும் சரியாக நடக்கவில்லை.

  ஆகையால் மும்பையில் அவர் சிகரெட்டுகளை முழு நேரமும் புகைக்க நேரிட்டார். கடைசியில், நிறைய உள்நோக்கங்களுக்கு பிறகு, "நான் ஒரு இயக்குநராக மும்பைக்கு வரவில்லை, ஆனால் எனது பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு பதிலாக நான் ஓடிவிடுகிறேன்" என்று அவர் உணர்ந்தார்.

  "ஒரு மனிதரிடம் எவ்வளவுதான் பணம் இருந்தாலும், மனதுக்கு நிம்மதி இல்லை என்றால் வாழக் கூட முடியாது" என்று உணர்ந்த சுஷில் இறுதியாக மீண்டும் தனது கிராமத்திற்குச் சென்றார். அங்கு அவர் ஆசிரியராகவும், சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் பணியாற்ற தொடங்கினார். மேலும் இறுதியாக இப்போது அவர் நிம்மதியாக வாழ்வதாக உணர்கிறார்.
  Published by:Karthick S
  First published: