இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக பதவியேற்ற சுஷில் சந்திரா

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக பதவியேற்ற சுஷில் சந்திரா

சுஷில் சந்திரா

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றுக்கொண்டார்.

 • Share this:
  இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இருந்துவந்தார். அவருடைய பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சுஷில் சந்திரா நேற்று புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் 24-வது தலைமைத் தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டார். இன்று அவர், தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்றுக்கொண்டார்.

  2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு 2022-ம் ஆண்டு மே மாதம் வரை பதவிக் காலம் உள்ளது. இந்த ஓராண்டு இடைவெளியில் கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

  சுஷில் சந்திரா, 1980-ம் ஆண்டு இந்திய வருவாய் துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரியாவார். சுமார் 39 ஆண்டுகள் வருமான வரித்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 2016-ம் ஆண்டு மத்திய நேரடி வரித்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
  \

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: