பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் ஜூன் 14-ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் உயிரை மாய்த்துக்கொண்டார். அவர் உயிரிழந்து இன்றுடன் ஒரு மாதம் கடந்த நிலையில் அவரது காதலி ரியா சக்ரபர்த்தி, இன்ஸ்டாகிராமில் உருக்கமான ஒரு கடிதத்தைப் பதிவிட்டுள்ளார்.
“சுஷாந்த் நீ இறந்த பிறகான வெறுமையை என்னால் இன்னும் எதிர்கொள்ள இயலவில்லை. காதல் என்ற ஒன்று இருப்பதாக நம்பிக்கை பிறந்ததும், அதன் ஆற்றலையும் உன்னால் அறிந்துகொண்டேன். மிக எளிய கணக்கு ஈக்வேஷன் கூட வாழ்வின் அர்த்தத்தை புரியவைக்கும் என்பதை நீதான் கற்றுக்கொடுத்திருக்கிறாய். நீ இன்னும் அமைதியான இடத்தில் இப்போது இருக்கிறார். பால்வெளிகளும், நிலவும், நட்சத்திரங்களும் உன்னை வரவேற்கும் இடத்தில் இருக்கிறாய்.
மகிழ்ச்சியும், சக மனிதர் மீது அன்பும் கொண்ட நட்சத்திரம் நீ. அழகான ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் இலக்கணமோ அது நீதான். எல்லாவற்றையும் திறந்த மனதுடன் நேசித்த நீ, நம் அன்பு நீளும் என்பதையும் காட்டியிருக்கிறாய்.
உன்னை இழந்து 30 நாட்கள் ஆகியிருக்கிறது. உன்னை நேசிக்க ஒரு நாள் வாழ்நாள் இருக்கிறது" என்று பதிவிட்டிருக்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.