• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்த வங்கியின் ஏடிஎம் சேவை இன்று முதல் நிறுத்தம்...

இந்த வங்கியின் ஏடிஎம் சேவை இன்று முதல் நிறுத்தம்...

ஏ.டி.எம்.

ஏ.டி.எம்.

தங்கள் வங்கி வாடிக்கையாளர்கள் பிற வங்கிகளின் ஏடிஎம் மெஷின்களில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

  • Share this:
    சிறு நிதி நிறுவனமான சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க், முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த வங்கியின் ஏடிஎம்-கள் அனைத்தும் இன்று (அக்டோபர் 1ஆம் தேதி) முதல் மூடப்படுவதாக அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை வழங்கி வரும் சிறு நிதி நிறுவனம் சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க். இந்த வங்கி இன்று முதல் வங்கியின் ஏ.டி.எம்.கள் அனைத்தையும் மூடுவதாக அறிவித்துள்ளது. எனினும், சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் மற்ற வங்கிகளில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

    அதன்படி, சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் தங்களது ஏ.டி.எம். கார்டை வைத்து மற்ற வங்கிகளின் ஏடிஎம் மெஷின்களில் பணம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அதில் எந்தவித பிரச்னையும் இருக்காது என்றும், ஏ.டி.எம். செயல்பாட்டுச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஏ.டி.எம்.கள் மூடப்பட்டாலும், வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிச் சேவைகளான ஆன்லைன் பேங்கிங்கிங், மொபைல் பேங்கிங்கிங் வசதிகளை பெறலாம் என்றும் அதில் எந்த பிரச்னையிம் இருக்காது என்றும் அறிவித்துள்ளது. ஆன்லைன் பணப் பரிவர்த்தைனையில் போன்ற சேவைகளில் எவ்வித பாதிப்பும் இருக்காது என்றும் சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் தெரிவித்துள்ளது.

    இது குறித்து அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சூரியோதய ஆர் பாஸ்கர் பாபு கூறுகையில், “எங்கள் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் எங்கள் வங்கி ஏ.டி.எம்.களைப் பயன்படுத்துவதில்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம். எனவே, எங்கள் ஏ.டி.எம்.களுக்குப் பதிலாக, வாடிக்கையாளர்களுக்கு மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் இலவச பரிவர்த்தனை வசதியை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

    Must Read : பணத்தை எந்த வங்கியில் போட்டால் நல்ல வட்டி கிடைக்கும் தெரியுமா?

    சூர்யோதய் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் ஒடிசாவை உள்றிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தங்களின் கிளைகளை விரிவுபடுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: