Home /News /national /

சத்தமில்லாமல் சரியும் பெண்கள்… 5 ஆண்டுகளில் வேலையை உதறிய 2 கோடி பேர்! ஷாக் ரிப்போர்ட்!

சத்தமில்லாமல் சரியும் பெண்கள்… 5 ஆண்டுகளில் வேலையை உதறிய 2 கோடி பேர்! ஷாக் ரிப்போர்ட்!

ஐந்தாண்டுகளில் 2 கோடி பெண்கள் தங்கள் பணியில் இருந்து விலகிவிட்டதாக வரும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

ஐந்தாண்டுகளில் 2 கோடி பெண்கள் தங்கள் பணியில் இருந்து விலகிவிட்டதாக வரும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

ஐந்தாண்டுகளில் 2 கோடி பெண்கள் தங்கள் பணியில் இருந்து விலகிவிட்டதாக வரும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

நாட்டில் இனக்குழுக்கள் மற்றும் மதங்களில் தேசிய குடும்ப சுகாதாரம் (National Family Health Survey-5) நடத்திய ஆய்வு ஒன்றில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) 2.0ஆக குறைந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் மொத்த கருவுறுதல் விகிதம் 1.6ஆக உள்ளது. அதே நேரம் கிராமப்புறங்களில் அது 2.1 ஆக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. NFHS-4இல் (2015-16) கருவுறுதல் விகிதம் 2.2ஆக இருந்த நிலையில், NFHS-5இல் (2019-21) இது 2.0 ஆக குறைந்துள்ளது. இந்தப் போக்கு நிலைப்படுத்தப்பட்டால் இந்தியாவில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு உழைக்கும் வயது மக்கள்தொகை குறைவதைக் காண்போம்.

அதேநேரம், கடந்த ஐந்தாண்டுகளில் 2 கோடி பெண்கள் தங்கள் பணியில் இருந்து விலகிவிட்டதாக வரும் புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. சிலர் பணியை விட்டுவிடுகிறார்கள், மற்றவர்கள் வேலை தேடுவதை நிறுத்திவிடுகிறார்கள். நமது பொருளாதாரம் எப்போதும் வளர்ச்சியை உந்துவதற்கு நுகர்வுச் செலவை அதிகம் நம்பியிருக்கிறது. எளிமையாகச் சொன்னால், நமது பொருளாதாரத்தின் நுகர்வு மற்றும் முதலீட்டுப் பகுதிகள் இரண்டையும் வளர்ப்பதற்கு அதிகமான இளைஞர்கள் உழைக்க வேண்டும்; மேலும் அதிகமான மக்கள் சம்பாதிக்க வேண்டும். 20 ஆண்டுகளில் இளம் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவதால், இவ்வளவு பெரிய ஒரு நாட்டிற்கு அர்த்தமுள்ள வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்வது அதிர்ச்சியூட்டும் வகையில் கடினமாக இருக்கும்.

இந்தியப் பொருளாதாரம் அடுத்த பத்தாண்டுகளில் 7.5 சதவீதமாக வளர்ந்தால், 2034-35க்குள் கொரோனா தொடர்பான இழப்புகளிலிருந்து மீண்டுவிடும் என்று ரிசர்வ் வங்கி சமீபத்தில் தரவுகளையும், அறிக்கையையும் வெளியிட்டது. பெண்கள் பணியிடத்தில் சேராமல் பத்தாண்டுகளுக்கு மேலான வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை என்று சொல்லலாம்.

இதையும் படிங்க | ஆசிரியர்களை மிரட்டும் மாணவர்கள்… பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் மொபைல் போன் கலாச்சாரம்… தீர்வு என்ன? உளவியலாளரின் கைட்லைன்ஸ் இதோ!

பெண்களுக்கான ஆரம்ப நிலை முதல் மூன்றாம் நிலை வரையிலான சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் பல நல்ல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனால், அது வேலைவாய்ப்பாக மாறுவதில்லை. பணியில் ஈடுபடும் பெண்களின் சதவிகிதம் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 2 கோடி பெண்கள் பணியில் இருந்து வெளியேறியுள்ளனர். இது ஒரு ‘மிகப் பெரிய ராஜினாமா’ என்று பார்க்கப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இது பணி-குடும்ப சமநிலை அல்லது மற்ற நோக்கத்திற்கான தேடலில் இருந்து உருவாகவில்லை. ஆனால், நாம் ஒரு மோசமான சுழற்சியில் இருக்கிறோம் என்பது இதன்மூலம் தெளிவாகிறது.

வியக்கத்தக்க வகையில் குறைவான பெண்களே பணியிடத்தில் எஞ்சியிருப்பதால், இன்னும் சிலரே பதவி உயர்வு பெறுகிறார்கள், பணியமர்த்தப்படுகிறார்கள். அடுத்த தலைமுறைப் பெண்கள் வேலைக்குச் செல்வது பெரும் விலையைக் கொடுக்கும். பணிபுரியும் பெண்களை எல்லா வகையிலும் இயல்பாக்கும் ஒரு சகோதரத்துவம் நமக்குத் தேவை. அன்னையர் தினம் மற்றும் மகளிர் தினம் பற்றிய குறைவான உரையாடல் மற்றும் பெண்களின் பகிர்ந்த அனுபவங்களின் அடிப்படையில் அவர்களை பணியிடத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை இயல்பானது.

கூட்டுக் குடும்ப அமைப்பு முடிவுக்கு வரும் நிலையில், நிதி நெருக்கடியுடன் கூடவே பணி செய்யும் தம்பதிகளுக்கு குழந்தை பராமரிப்பில் உள்ள சிரமங்களும் சிறிய குடும்பத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். 35 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களில் 27 சதவிகிதம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளை விரும்புவதாகவும், 7 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு குழந்தைகளுக்கு மேல் வேண்டும் என்று விரும்புவதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இப்படியே சென்றால் என்னவாகும்? இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 65 சதவிகிதம் பேர் இளைஞர்கள் ஆவர். இது நாட்டுக்கும் அதன் பொருளாதார வளர்ச்சிக்கும் பயனளிக்கிறது. ஆனால், வரும் காலங்களில் இந்த இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து, முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் மூலம் சமூக சமநிலையும் பாதிக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கான சில விஷயங்கள் குறித்து விரிவாக காணலாம்:

- திறந்த உரையாடல்கள் உங்களை எப்போதும் மேம்படுத்திக்கொள்ள உதவும்

- ஒரு வழிகாட்டியாக இருப்பீர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை

- பணிக்கு செல்லும் ஒரு தாயால் குழந்தைகள் பயன் பெறுவார்கள். பணி செய்யும் தாயுடன் வளரும் பெண் பிள்ளைகள் எதிர்காலத்தில் அதிக வருமானம் பெறுகிறார்கள் என்றும் ஆண் குழந்தைகள் பாலினம், பணி மற்றும் குடும்ப பணிகளில் சிறந்த அணுகுமுறையுடன் வளர்கிறார்கள் என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது. நீங்கள் ஒரு வேலை செய்யும் தாயாக இருந்தால், உங்கள் வீட்டில் வருமான அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், குழந்தைகளை சிறப்பான முறையில் வளர்க்கிறீர்கள் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
Published by:Archana R
First published:

Tags: Women, Work Place

அடுத்த செய்தி