இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? தேசிய ஊடகங்களின் கருத்து கணிப்புகள் சொல்வது என்ன

நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பில், பா.ஜ.க கூட்டணி 242 தொகுதிகளிலும், காங்கிரஸ் 162 தொகுதிகளிலும் 165 தொகுதிகளிலும் மற்றவை 135 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: May 19, 2019, 9:11 PM IST
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? தேசிய ஊடகங்களின் கருத்து கணிப்புகள் சொல்வது என்ன
ராகுல் காந்தி - நரேந்திர மோடி
news18
Updated: May 19, 2019, 9:11 PM IST
நாடு முழுவதும் ஏழு கட்ட வாக்குப் பதிவும் நிறைவடைந்த நிலையில், தேசிய ஊடகங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. ஒவ்வொரு ஊடகங்களின் முடிவுகள் வேறு வேறானதாக இருந்தாலும், அனைத்து ஊடகங்களின் முடிவுகளும் பா.ஜ.க பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்றே தெரிவிக்கின்றன.

ரிபப்ளிக் செய்தி நிறுவனம் சி வோட்டர் மற்றும் ஜன் கி பாட் ஆகிய இரு நிறுவனங்கள் மூலம் இரண்டு கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது.

சிவோட்டர் கருத்துக் கணிப்பின்படி, பா.ஜ.க கூட்டணி 287 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 128 தொகுதிகளிலும், மற்றவை 127 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.

ஜன் கி பாத் கருத்துக் கணிப்பின்படி, பா.ஜ.க கூட்டணி 305 தொகுதிகளிலும், காங்கிரஸ் 124 தொகுதிகளிலும் மற்றவை 113 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.

ஏ.பி.பி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் பா.ஜ.க கூட்டணி 287 தொகுதிகளிலும், காங்கிரஸ் 128 தொகுதிகளிலும் மற்றவை 127 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் பா.ஜ.க கூட்டணி 306 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி 132 தொகுதிகளிலும் மற்றவை 104 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ் கருத்துக் கணிப்பில், பா.ஜ.க கூட்டணி 242 தொகுதிகளிலும், காங்கிரஸ் 162 தொகுதிகளிலும் 165 தொகுதிகளிலும் மற்றவை 135 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Loading...
இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பா.ஜ.க கூட்டணி 259-284 தொகுதிகளிலும், காங்கிரஸ் 73-102 தொகுதிகளிலும் மற்றவை 58-80 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

என்.டி.டி.வி வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பா.ஜ.க கூட்டணி 303 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 126 தொகுதிகளிலும், மற்றவை 112 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நியூஸ்18 செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் பா.ஜ.க கூட்டணி 336 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 82 தொகுதிகளிலும் மற்றவை 124 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
First published: May 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...