• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கொரோனாவால் இந்திய பயணத்தை ரத்து செய்த போரிஸ் ஜான்சன்: குடியரசு தின சிறப்பு விருந்தினர் இவர் தான்

கொரோனாவால் இந்திய பயணத்தை ரத்து செய்த போரிஸ் ஜான்சன்: குடியரசு தின சிறப்பு விருந்தினர் இவர் தான்

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியப் பயணத்தை ரத்து செய்த நிலையில் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக சுரிநாம் நாட்டின் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி கலந்துகொள்வார் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

  • Share this:
புதிய வகை கொரோனா பரவலால் இங்கிலாந்தில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதுடன், இந்திய பயணத்தையும் பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்தார். ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் வெளிநாட்டைச் சேர்ந்த தலைவர் ஒருவர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பது வழக்கம். கடந்த ஆண்டு பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

இந்த ஆண்டில் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுத்தது மத்திய அரசு. அதனை அவரும் ஏற்ற நிலையில், இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து அங்கு பொது முடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தனது இந்திய வருகையை போரிஸ் ஜான்சன் ரத்து செய்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக சுரிநாம் நாட்டின் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி கலந்துகொள்வார் என மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் காணொலி வாயிலாக நடைபெற்ற வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டின் சிறப்பு விருந்தினராக அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்க கண்டத்தின் பரப்பளவிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் சிறிய நாடான சுரிநாமின் அதிபராக
2020 ஜூலை மாதம் சந்தோகி பதவியேற்றிருந்தார். 5.87 லட்சம் மக்கள் தொகை கொண்ட சுரிநாமில் 27.4% இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: