Home /News /national /

ஒமைக்ரான் பரவல் மிக வேகமாக இருக்கும்.. விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் எச்சரிக்கை

ஒமைக்ரான் பரவல் மிக வேகமாக இருக்கும்.. விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் எச்சரிக்கை

இந்த புதிய மாறுபாட்டால் ஏற்கனவே உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் கவலைக்கு நிலையில், ஒமைக்ரான் எழுச்சி மிக வேகமாக இருக்கும் என்றும், பலர் நோய்வாய்ப்படுவார்கள்," என்று செளமியா சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.

இந்த புதிய மாறுபாட்டால் ஏற்கனவே உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் கவலைக்கு நிலையில், ஒமைக்ரான் எழுச்சி மிக வேகமாக இருக்கும் என்றும், பலர் நோய்வாய்ப்படுவார்கள்," என்று செளமியா சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.

இந்த புதிய மாறுபாட்டால் ஏற்கனவே உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் கவலைக்கு நிலையில், ஒமைக்ரான் எழுச்சி மிக வேகமாக இருக்கும் என்றும், பலர் நோய்வாய்ப்படுவார்கள்," என்று செளமியா சுவாமிநாதன் எச்சரித்துள்ளார்.

    ஒமைக்ரான் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா எதிர்கொள்ள இருக்கும் மிகப்பெரிய சவாலானது மருத்துவ உதவிக்கான திடீர் தேவை என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

    ஒமைக்ரான் பரவல், உலகளவில் புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது, மருத்துவமனைகளில் இருந்து வெளிநோயாளிகள் பிரிவுக்கும், ஐசியுவில் இருந்து வீட்டு அடிப்படையிலான பராமரிப்புக்கு சுமையை ஏற்றும் என்று செளமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது, உலக அளவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகமாக பரவினாலும், அதன் தாக்கம் தீவிரமாக இல்லாதது தடுப்பூசிகள் பலன் அளிப்பதையே காட்டுகிறது. தடுப்பூசிகள் ஒமைக்ரானுக்கு எதிராக நல்ல பலனை அளிப்பதுடன் பல்வேறு நோய்களிலிருந்தும் நம்மை காக்க வல்லதாக இருக்கிறது.

    Also read:  இந்தியாவில் ஓமைக்ரான் பாதித்த நபர் மாரடைப்பால் மரணம்...

    உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்திருக்கும் கொரோனா தடுப்பூசிகள் அனைத்தும் கோவிட் தொற்றிற்கு எதிராக அதிக அளவு பாதுகாப்பு அளிக்கிறது. தடுப்பூசியின் ஆற்றல் வயது, முன்பே இருக்கும் நோய்கள் போன்ற பல்வேறு காரணிகளை சார்ந்து இருக்கிறது. ஒமைக்ரான் வகை பாதிப்பு குறித்த தகவல்கள் இப்போதுதான் கிடைக்கத் தொடங்கி இருக்கிறது.

    ஒமைக்ரான் அலையில் இந்தியா சந்திக்கவுள்ள மிகப்பெரிய சவால், மருத்துவப் பராமரிப்புக்கான தேவை அதிகரிப்பதே. ஒமைக்ரான் இந்தியாவில் அதிகவேகமாகப் பரவப் போகிறது. அப்போது மருத்துவத் துறைக்கு அழுத்தம் மருத்துவமனைகளின் உள் சிகிச்சைப் பிரிவிலிருந்து இருந்து புற நோயாளிகள் பிரிவுக்கு மாறும். ஐசியுக்களில் இருந்து அழுத்தம் மாறி வீடுகளிலேயே மருத்துவ சேவையும் ஆலோசனையும் தேவைப்படுவோர் ஏராளமானோர் காத்திருக்கும் சூழல் உருவாகும். மக்களுக்கு அறிகுறி இல்லாமல் இருக்கலாம். ஆனால், மருத்துவ ஆலோசனைக்காக அவர்கள் மருத்துவப் பணியாளர்களை சந்திக்க அதிக ஆர்வம் காட்டுவர். இந்த மாதிரியான தேவைகளை எதிர்கொள்ளவே நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இந்த ஒமைக்ரான் அலையில் ஒட்டுமொத்த அழுத்தமும் புறநோயாளிகள் பிரிவில் தான் இருக்கப் போகிறது. ஐசியுக்களில் அனுமதியாவோர் எண்ணிக்கையைவிட வீட்டில் மருத்துவ சேவை தேவைப்படுவோர் மிகமிகமிக அதிகமாக இருக்கப்போகிறது. நோயாளிகளை வீடுகளிலேயே வ்வைத்துப் பராமரித்தல் நல்லது. அது சாத்தியப்படாவிட்டால் தனிமைப்படுத்துதல் மையங்களை அமைக்கலாம். மேம்படுத்தப்பட்ட சிகிச்சை தேவைப்படுவோரை மற்றும் மாற்றலாம்.

    அதேபோல், பொதுமக்களும் ஒமைக்ரான் வைரஸை சாதாரண சளியை ஏற்படுத்தும் காமன் கோல்ட் வைரஸ் போன்று நினைத்து அஜாக்கிரதையாக இருக்கும் அபாயமும் இருக்கிறது. ஒமைக்ரானின் தாக்கத்தை இப்போதைய சூழலில் மிதமானது, சாதாரண சளியைப் போன்றது என்றெல்லாம் புறந்தள்ள முடியாது.

    தென் ஆப்பிரிக்கா, பிரிட்டனில் இருந்து வரும் தகவல் எல்லாம் ஒமைக்ரான் 4 மடங்கு அதிகம் பரவக் கூடியது என்பதையே உறுதியாக நிரூபித்துள்ளது. அதேவேளையில் மருத்துவமனையில் சேரும் அபாயம் 4ல் ஒரு மடங்காக இருக்கிறது. அதேபோல் மருத்துவமனையில் இணைநோய், தீவிர பாதிப்பு, மூச்சுத் திணறல் ஆகியன காரணங்களுடன் அனுமதியாவோரின் எண்ணிக்கை மற்ற திரிபுகளை ஒப்பிடும்போது ஒமைக்ரானில் மிகமிகக் குறைவாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

    Also read: இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,270 ஆக அதிகரிப்பு!
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19, Omicron

    அடுத்த செய்தி