சபரிமலை போராட்டத்தை முன்னின்று நடத்திய சுரேந்திரனுக்கு பாஜக சீட்...!

பிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை கையில் எடுக்கும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

news18
Updated: March 24, 2019, 4:09 PM IST
சபரிமலை போராட்டத்தை முன்னின்று நடத்திய சுரேந்திரனுக்கு பாஜக சீட்...!
சுரேந்திரன்
news18
Updated: March 24, 2019, 4:09 PM IST
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா தொகுதியில், பாஜக தலைவர்களில் ஒருவரான சுரேந்திரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் தரிசனம் செய்ய அனுமதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த உத்தரவை அமல்படுத்த ஆளும் இடதுசாரி முன்னணி அரசு மும்முரமாக இருந்த நிலையில், அதை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.

இந்த விவகாரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பெரும் மோதலும் வெடித்தது. சபரிமலை பிரச்சினையை முன்வைத்து ஒவ்வொரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. பாஜக கூட்டத்தில் கூட அம்மாநில தலைவர் சபரிமலை விவகாரம் நமக்கு கிடைத்த தங்கமான வாய்ப்பு என்று பேசியது சர்ச்சையானது.

தற்போது இந்த பிரச்னை அமுங்கி இருந்தாலும், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இதனை மீண்டும் கிளப்ப பல கட்சிகள் திட்டமிட்டன. ஆனால், இதில் தீவிர கவனம் செலுத்திய தேர்தல் ஆணையம் அரசியல்வாதிகளுக்கு கடிவாளம் போட்டது. பிரசாரத்தில் சபரிமலை விவகாரத்தை கையில் எடுக்கும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில், சமீபத்தில் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை தலைமை அறிவித்தது. திருவனந்தபுரம் தொகுதியில் மிசோரம் மாநில முன்னாள் கவர்னர் கும்மனம் ராஜசேகரன் போட்டியிடுகிறார். சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா தொகுதியில் சுரேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சுரேந்திரன் சபரிமலை போராட்டங்களை முன்னின்று நடத்தியவர். வன்முறையை தூண்டியதாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் அகிலபாரத் வித்யா பரிஷத் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்த சுரேந்திரன், தற்போது பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

Also See...
Loading...
First published: March 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...