ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளோம் - பிரதமர் நரேந்திர மோடி

ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி உள்ளோம் - பிரதமர் நரேந்திர மோடி

மோடி

மோடி

PM Narendra Modi சூரத்தில் ரூ.3400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கிவைத்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Surat, India

சூரத்தில் ரூ.3400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று சூரத்தில் ரூ. 3400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சாலை உள்கட்டமைப்பு பணிகள் மற்றும் வைர ஆராய்ச்சி மற்றும் வணிக நகரத்தின் பிரதான நுழைவாயிலின் முதல் கட்டத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கும்  பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், டாக்டர் ஹெட்கேவார் பாலம் முதல் பீம்ராட் - பம்ரோலி பாலம் வரை 87 ஹெக்டேர் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் பல்லுயிர் பூங்காவிற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். மேலும் சூரத்தில் உள்ள அறிவியல் மையத்தில் கோஜ் அருங்காட்சியகத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “புனிதமான நவராத்திரி காலத்தில், சூரத்தில் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், வரவிருக்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. 75 அமிர்த நீர்நிலை  பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சூரத் உழைப்பை மதிக்கும் நகரம். சூரத் மண்ணில் இந்தியாவின் எல்லாப் பகுதி மக்களும் வசிக்கின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் சூரத்தில் ஏழைகளுக்காக சுமார் 80,000 வீடுகளைக் கட்டி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உள்ளோம். ஆயுஷ் மான் பாரத் திட்டத்தில் நாட்டில் இதுவரை சுமார் 40 மில்லியன் ஏழை நோயாளிகள் இலவச சிகிச்சை பெற்றுள்ளனர். 32 லட்சத்துக்கும் அதிகமான நோயாளிகள் குஜராத்தை சேர்ந்தவர்கள், சுமார் 1.25 லட்சம் பேர் சூரத்தை சேர்ந்தவர்கள்.

இன்று சூரத் நகரில் 25 சார்ஜிங் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன, அதே எண்ணிக்கையிலான நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் சூரத்தில் 500 சார்ஜிங் நிலையங்களை அமைப்பதில் இது ஒரு பெரிய படியாகும்.” இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர், பூபேந்திர படேல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.ஆர்.பாட்டீல், பிரபுபாய் வாசவம், மத்திய இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், குஜராத் மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி உள்ளிட்டோர் கலந்து ண்டனர்.

Published by:Karthi K
First published:

Tags: Narendra Modi, Prime minister, Surat