எஃகு தொழிற்துறை அமைச்சர் ராம் சந்திர பிரசாத் சிங் புதன்கிழமை சூரத்தில் இரும்புக் கசடுகளால் ஆன ஆறு வழி நெடுஞ்சாலையை திறந்து வைத்தார். இது நாட்டிலேயே கழிவுகளால் முதல் முறை உருவாக்கிய சாலை ஆகும்.
"குஜராத்தின் சூரத்தில் இரும்புக் கசடுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட முதல் ஆறு வழிச் சாலையை எஃகு தொழிற்துறை அமைச்சர் திறந்து வைத்தார். சாலையைத் திறந்து வைக்கும் போது, அனைத்து கழிவுகளையும் செல்வமாக(waste to wealth) மாற்றுவதன் மூலம் சுழற்சிப் பொருளாதாரம் உயரும். மேலும் நாட்டின் வளத் திறனை மேம்படுத்தவும் உதவும் என்று அமைச்சர் விவரித்தார். எஃகு ஆலைகளின் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் இது வழிவகுக்கும் என்றார்.
உள்நாட்டு தயாரிப்பில் ஈடுபட்டால் டெஸ்லாவை வரவேற்கத் தயார்!
100 சதவீதம் எஃகு பதப்படுத்தப்பட்ட கசடுகளைப் பயன்படுத்தி இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலைக் கட்டுமானத்தில் இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவது அதன் நீடித்த தன்மையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கட்டுமானச் செலவைக் குறைக்கவும் உதவும், ஏனெனில் கசடு அடிப்படையிலான பொருட்கள் இயற்கையான கலவைகளை விட சிறந்த பண்புகளைக் கொண்டுள்ளன.
சாலை கட்டுமானத்தில் எஃகு கசடுகளைப் பயன்படுத்துவது நாட்டின் இயற்கையான மூலப் பொருட்களின் பற்றாக்குறையையும் நிவர்த்தி செய்யும். 2030 ஆம் ஆண்டளவில் இந்தியாவில் பல்வேறு செயல்முறை வழிகளில் இருந்து எஃகு கசடு உற்பத்தியை அதிகரிக்கும்.
எஃகு தயாரிப்பாளரான ஏஎம்என்எஸ் இந்தியா, ஹசிராவில் உள்ள உற்பத்தி ஆலையில் இருந்து சுமார் 1 லட்சம் டன் பதப்படுத்தப்பட்ட எஃகு கசடுகளைப் பயன்படுத்தி 1 கிலோமீட்டர் நீளமுள்ள ஆறு வழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) ஆய்வகமான சென்ட்ரல் ரோடு ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (CRRI) உடன் இணைந்து ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் (AMNS) இந்தியா இந்த சாலை அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஸ்டீல் ரிசர்ச் & டெக்னாலஜி மிஷன் ஆஃப் இந்தியாவின் (எஸ்ஆர்டிஎம்ஐ) இயக்குனர் முகேஷ் குமார் கூறுகையில், ‘கசடு என்பது அடிப்படை ஆக்ஸிஜன் உலை (பிஓஎஃப்) வழி, மின்சார வில் உலை (ஈஏஎஃப்) மற்றும் எஃகு உற்பத்தியின் போது வெளிவரும் ஒரு துணை பொருள் ஆகும். இந்தக் கசடுகள் நிலத்தை நிரப்புவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது," என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Industrial output, Road Safety, Surat