BREAKING சூரத்தில் தீ விபத்து - 19 பேர் உயிரிழப்பு; பிரதமர் இரங்கல்!

உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Web Desk | news18
Updated: May 24, 2019, 7:15 PM IST
BREAKING சூரத்தில் தீ விபத்து - 19 பேர் உயிரிழப்பு; பிரதமர் இரங்கல்!
தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து தப்பிக்க வெளியே குதிக்கும் மாணவர்கள்.
Web Desk | news18
Updated: May 24, 2019, 7:15 PM IST
குஜராத் மாநிலம் சூரத் நகர் அருகே உள்ள பயிற்சி வகுப்பு கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். 

தீ பற்றிய கட்டடத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

இரண்டாம் மாடியில் பயிற்சி ஒன்று இருந்துள்ளது. அங்கு ஏற்பட்ட தீ விபத்தால் மாணவர்கள் பலர் கருகி பலியாகி உள்ளனர். பலர் தீயில் இருந்து தப்பிக்க  மாடியிலிருந்து கீழே குதித்துள்ளனர். இதனால், பல மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மீட்புப் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத காரணத்தால் பாதிப்பு குறித்த முழு விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. தீ விபத்தில் பாதிக்கப்பட்டோர், உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு பிரதமர் மோடி ஆறுதலும் வருத்தமும் தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல்வர் விஜய் ருபானி பாதிக்கப்பட்டோருக்கும் பலியானோருக்கும் தலா 5 லட்சம் அரசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.



 
First published: May 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...