ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரூ.3 கோடி மதிப்புள்ள பென்ஸ் காரை ஊழியர்களுக்கு பரிசளித்த வைர வியாபாரி!

ரூ.3 கோடி மதிப்புள்ள பென்ஸ் காரை ஊழியர்களுக்கு பரிசளித்த வைர வியாபாரி!

ஊழியர்களுக்கு பரிசளிக்கப்பட்ட பென்ஸ் காரகள்

ஊழியர்களுக்கு பரிசளிக்கப்பட்ட பென்ஸ் காரகள்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  25 ஆண்டுகளாக பணியாற்றிய தனது ஊழியர்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பென்ஸ் காரை 3 பேருக்கு வைர வியாபாரி பரிசளித்துள்ளார். 

  குஜராத் மாநிலம், சூரத்தில் உள்ள வைர வியாபாரியான சவ்ஜி தோலாகியா, `ஹரே கிருஷ்ணா’ என்ற ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் தற்போது 5,500 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதில் கடந்த 25 ஆண்டுகளாக உண்மையாக பணியாற்றி வந்த ஊழியர்களான 40 வயதுடைய நிலேஷ் ஜடா, 43 வயதான மகேஷ் சந்திரபாரா, 38 வயதான முகேஷ் சந்திரபாரா ஆகிய 3 பேரும் இந்த நிறுவனம் தொடங்கிய போது சிறுவர்களாக பணிக்குச் சேர்ந்தவர்கள்.

  இவர்கள் வேறு எந்த நிறுவனத்துக்கும் செல்லாமல் தொடர்ந்து விசுவாசமாகவும் உணமையாகவும் இந்த நிறுவனத்தில் பணியற்றி வருகின்றனர். அவர்களின் கடுமையான உழைப்பிற்கும் விசுவாசத்திற்கும் தகுந்த பரிசாக ரூ.1 கோடி மதிப்புள்ள பென்ஸ் ஜிஎல்எஸ் 350டி எஸ்யுவி காரை சவ்ஜி தோலாகியா பரிசாக அளித்துள்ளார். அந்தக் காரின் சாவிகளை சூரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச கவர்னர் மற்றும் முன்னாள் குஜராத் முதலமைச்சர் ஆனந்தீபன் படேல் முன்னிலையில் ஊழியர்களுக்குக் கொடுத்து கெளரவித்தனர்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Benz car Gift, Gujarath Diamond businessman, Surat Businessman, Surprise gift